இரண்டாம் பாகம்
பொருந்திய நல்ல பெருமையை
யுடைய பேறுகளை யடையுங்கள்.
2912.
முற்ற நாளிவ ணிருந்தியன் முகம்மதைக் காணப்
பெற்றி லேன்வருத் தமும்பெருத் தனவினி வீந்தா
லுற்று நீவிர்க ளென்சலா முரைமினென் றோதி
வெற்றி மன்னவர் சூழ்தர விறந்தனர் மேலோய்.
21
(இ-ள்) மேன்மையை
யுடைய நபிகட் பெருமானே! யான் எனது சிந்தனை முடிவதற்குள்ள நாள் வரை இந்தத் திரு மதீனமா நகரத்தின்
கண் ணுறைந்து இயல்பினை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லலாகு
அலைகி வசல்ல மவர்களைத் தெரிசிக்கப் பெறாதவ னாயினேன். எனக்கு வியாதியினது துன்பங்களும்
அதிகரித்தன. இனி யா னிறந்து போனால் நீங்களிருந்து அவர்களுக்கு என் சலாமைக் கூறுங்களென்று
சொல்லி விஜயத்தைக் கொண்ட அரசர்களாகிய அந்தப் பனீ குறைலா கூட்டத்தார்கள் சூழும் வண்ணம்
மரித்தார்.
2913.
கவின்ப டைத்தநல் லிபுனுகை பானுமைக் காண
விவண டைந்துகாத் திருந்தன ரெனுமியல் வலியாற்
புவியின் மற்றொரு தேசத்திற் புகுந்திடா வண்ணஞ்
சவிகொண் மெய்யவர் வருவரிங் கெனவிருந் தனனால்.
22
(இ-ள்) அழகைப் பெற்ற
நன்மை பொருந்திய அந்த இபுனுகைபா னென்பவர் உங்களைத் தெரிசிக்கும் வண்ணதம் இந்தத் திரு
மதீனமா நகரத்தின் கண் வந்து சேர்ந்து காத்திருந்தா ரென்று கூறும் இயல்பினது வலிமையால் யான்
இப் பூமியில் வேறொரு நகரத்திலும் போகாத படிப் பிரகாசத்தைக் கொண்ட சரீரத்தை யுடையவர்களான
அந் நபிகட் பெருமான் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் இந் நகரத்தின்
கண் வருவார்க ளென்று இருந்தேன்.
2914.
தெருளு மாந்தர்கள் சூழ்தர மதீனத்திற் செறிந்த
விருள றும்படி வந்தன ரெனுமொழி கேட்டு
மருளுஞ் சிந்தையிற் களிப்புற வுவகையின் மகிழ்ந்து
திரும லர்ப்பதங் காணுதற் கெழுந்தனன் சிறியேன்.
23
(இ-ள்) சிறியே
னாகிய யான் அவ்வா றிருக்க, அந் நபிகட் பெருமானவர்கள் கல்வியினால் தெளிதலுற்ற மானிடர்கள்
சூழும் வண்ணம் இந்தத் திரு மதீனமா நகரத்தின்கண் நெருங்கிய அந்தகாரமானதற்றுப் போகும்படி வந்தார்களென்று
கூறிய வார்த்தைகளைக் கேள்வியுற்று மயங்கா நிற்கும் மனதினிடத்துச் சந்தோஷமானது நிலைக்கும்
வண்ணம் உவகையினாற்
|