இரண்டாம் பாகம்
ககுபத்துல்லாவை நோக்கித் தொழுத படலம்
கலிவிருத்தம்
2953.
நபியெனத் தீனிலை நடத்து நாண்முதற்
கவினுறும் பைத்துல்மு கத்தி
சென்னுமத்
தவிசினை நோக்கியே தக்கு
பீறொடும்
புவியிடைத் தொழுகையைப்
பொருந்தி நின்றனர்.
1
(இ-ள்) நாயகம் நபிகட்
பெருமானார் நபி செய்யிதுல் குறைஷிய்யா ஷபீவுல் முதுனபீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் இப் பூமியின் கண் நபியென்று சொல்லித் தீனுல் இஸ்லா
மென்னும் மார்க்க நிலைமையை நடத்திய நாள் முதலாய் அழகானது நிலைக்கப் பெற்ற பைத்துல் முகத்தி
சென்று சொல்லும் அத் தவிசைப் பார்த்துத் தக்பீ றுடன் வணக்கத்தைப் பொருந்தி நின்றார்கள்.
2954.
தூவத்தண் டுளிமழைக் கவிகைத்
தூதுவர்
தீவத்தும் புகழ்தர வணக்கஞ்
செய்யுநாட்
பாவத்தின் றிரள்கெடப்
படுத்தித் தோன்றிய
காபத்துல் லாவைப்பின் காட்ட
லில்லையால்.
2
(இ-ள்) அன்றியும், மேகக்
குடை யானது குளிர்ச்சி பொருந்திய திவலைகளைச் சிந்தும் வண்ணம் றசூ லாகிய நாயகம் நபிகட்
பெருமானார் நபி முகம்மது முஸ்தபா சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தீவுகளின் கண்ணுந் தங்களின்
கீர்த்தியான துண்டாகும்படி தொழுகையை யியற்றும் நாட்களில் பாவங்களினது கூட்டத்தைச் சிதையச்
செய்து விளங்கிய கஃபத் துல்லா வென்னும் பள்ளிக்குப் பின் புறத்தைக் காட்டித் தொழுத நாட்க
ளில்லை.
2955.
மகிதலத் தினிலுயர் மக்க
மாகிய
நகர்விடுத் தணிமதி னாவை
நண்ணிச்சூழ்
புகழொடுந் தீனெறி புரந்து
வைகுநாட்
டிகழ்சகு பானென விளங்குந் திங்களில்.
3
(இ-ள்) அன்றியும், அவர்கள்
இப் பூமியின் கண் மேன்மைப்பட்ட மக்க மாகிய திருப்பட்டினத்தை விட்டு அழகிய திரு
|