பக்கம் எண் :

சீறாப்புராணம்

1108


இரண்டாம் பாகம்
 

வத்தான் படைப் படலம்

 

கலிவிருத்தம்

 

2994. மாறரு நெடுவரை மக்க மாநகர்த்

     தேறல ரினையன நிகழ்த்துஞ் செய்கையைக்

     கூறரும் பெரும்புகழ் கொண்டன் மானபி

     வீறுடைத் திருச்செவி விளையக் கேட்டனர்.

1

      (இ-ள்) சொல்லுதற் கருமையான பெரிய கீர்த்தியைக் கொண்ட மேகமாகிய பெருமை பொருந்திய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா அஹ்மது முஜ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் வேறக் கற் கரிய நீண்ட மலைகளையுடைய திரு மக்கமா நகரத்தினது சத்துராதிகளான காபிர்கள் நடத்தா நிற்கும் இப்படிப்பட்ட செய்கையைப் பெருமையை யுடைய தங்களின் தெய்வீகந் தங்கிய காதுகளினிடத்து முற்றக் கேள்வியுற்றார்கள்.

 

2995. அரிகடஞ் செய்கைக ளனைத்துங் கேட்டருள்

     பெருகிய மனத்தினிற் பிரிய முற்றெழில்

     வரிசைமன் னவர்களை யழைத்து வம்மென

     வுரைசெயத் தூதுவ ரோடி யோதினார்.

2

      (இ-ள்) சத்துராதிக ளாகிய அந்தக் காபிர்களின் செய்கைக ளெல்லாவற்றையும் அவ்வாறு கேட்டுக் கிருபையான தோங்கப் பெற்ற தங்களி னிதயத்தின் கண் உவகையுற்று அழகிய சங்கையையுடைய அரசர்களான அசுஹாபிமார்களைக் கூட்டிக் கொண்டு வாருங்க ளென்று கற்பிக்க, ஒற்றர்கள் விரைந்து போய் அஃதை அவர்களுக்குச் சொன்னார்கள்.

 

2996. விற்கர வலியபூ பக்கர் வெற்றிசேர்

     மற்புய ருமறுது மானல் வாளலி

     சொற்பெருந் தோழருந் தூதென் றோதுவோர்

     முற்படு நபிதிரு முன்ன முன்னினார்.

3

      (இ-ள்) அவ்வாறு சொல்ல, கோதண்டத்தைத் தாங்கிய கையினது வல்லமையை யுடைய அபூபக்கர் சித்தீகு றலி யல்லாகு அன்கு அவர்களும், விஜயத்தைப் பொருந்திய வலிமையைக் கொண்ட தோள்களை யுடையவர்களான உமறு கத்தாபு றலி யல்லாகு அன்கு அவர்களும், உதுமா னிபுனு அப்பான் றலி யல்லாகு அன்கு அவர்களும், நல்ல வாளாயுதத்தை யுடைய அலீ