இரண்டாம் பாகம்
யிபுனு அபீத் தாலிபு றலியல்லாகு
அன்கு அவர்களும், கீர்த்தியினது பெருமையை யுடைய நேசர்களாகிய மற்ற அசுஹாபிமார்களும், றசூ லென்று
சொல்லப் பட்டவர்கட்கு முதன்மையான நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல
மவர்களின் தெய்வீகந் தங்கிய சந்நிதானத்தில் வந்து சேர்ந்தார்கள்.
2997.
மனனுறை யறிவென விருக்கு மன்னவ
ரனைவரு மடுத்துறைந் திருப்ப
வாரணத்
தனிநிலை யுள்ளகந் ததும்ப
நந்நபி
யினியன மொழிகொடுத் தியம்பு
வாரரோ.
4
(இ-ள்) நமது நாயகம் நபிகட்
பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தங்களினிதயத்தின்
கண் தங்கிய அறிவைப் போலுமிருக்கின்ற அரசர்களான அவ் வசுஹாபிமார்களியாவரும் அவ்வாறு அங்கு
சமீபித்துத் தங்கியிருக்க, அவர்களுக்கு வேதங்களினது ஒப்பற்ற நிலைமையானது மனத்தினுள் ததும்பும்
வண்ணம் இனிமையை யுடையன வாகிய வார்த்தைகளைச் சொல்லி சொல்லுவார்கள்.
2998.
கொலைமனத் தபூசகல் குழுவு மந்நகர்ச்
சிலைவய வீரருந் திரண்டு
தீனவர்
மலைவுறப் பேரமர் வளர்க்க
வேண்டுமென்
றிலைமலி வேலினீ
ரிருக்கின் றார்களால்.
5
(இ-ள்) இலைகள் மலிந்த
வேலாயுதத்தை யுடைய நேசர்களே! கொலைத் தொழிலைக் கொண்ட இதயத்தை யுடைய அபூஜகி லென்பவனின்
கூட்டமும் அந்தத் திரு மக்கமா நகரத்தினது கோதண்டத்தின் வெற்றியைப் பொருந்திய வீரர்களும்
ஒன்று கூடித் தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தை யுடைய நம்மவர்கள் மயக்க முறும்படி பெரிய
யுத்தத் தொழிலை வளர்க்க வேண்டுமென் றிருக்கின்றார்கள்.
2999.
மாவிசும் பமரருக் கிறைவ
ரிம்மதி
னாவினிற் போயமர் நடத்த
வேண்டுமென்
றேவின னிறையென விசைத்த
மாற்றமும்
போவதன் றிகல்கெடப் புரிதல்
வேண்டுமால்.
6
(இ-ள்) அன்றியும், பெரிய
தேவ லோகத்தினது தேவர்களான மலாயிக்கத்து மார்களுக்கு அதிபதி யாகிய ஜிபுரீ லலைகிஸ்ஸலா மவர்கள்
இந்தத் திரு மதீனமா நகரத்தின் கண் சென்று யாவற்றிற்கு மிறைவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவானவன்
போர்த் தொழிலை நடாத்த வேண்டு மென்று கற்பித்தா னென்று கூறிய வசனமும் போவதல்ல, ஆதலால்
நாம் அக் காபிர்களின் வலிமையானது கெடும் வண்ணம் செய்தல் வேண்டும்.
|