பக்கம் எண் :

சீறாப்புராணம்

1110


இரண்டாம் பாகம்
 

3000. வல்லவன் சிபுரியீ லுரைத்த வாய்மையிற்

    செல்லவுந் தீனெறி விசயஞ் செய்யவும்

    நல்லவை நமக்கிவை யன்றி நாட்டமொன்

    றில்லையென் றிசைநபி யிசைத்திட் டாரரோ.

7

     (இ-ள்) அன்றியும், கீர்த்தியை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் வல்லவனான ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவின் ஜிபுரீ லலைகிஸ்ஸலா மவர்கள் கூறிய வசனப் பிரகாரம் நாம் போகவும், தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தின் வெற்றியை யுண்டாக்கவும், நன்மையை யுடையவை இவையே யல்லாமல் நமக்கு ஓர் விருப்பமுமில்லை யென்று சொன்னார்கள்.

 

3001. நாயகன் மறைவழி நடத்து நந்நபி

     வாயகத் துதித்தசொன் மாற லின்றியே

     சேயென நடப்பது திறமைத் தாமெனத்

     தூயவ ரியாவருந் துணிவுற் றார்களால்.

8

      (இ-ள்) யாவற்றிற்கும் நாயகனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் புறுக்கானுல் மஜீ தென்னும் வேத நெறியை நடத்தா நிற்கும் நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் வாயினிடத்துத் தோன்றிய வார்த்தைகளுக்கு மாறுத லில்லாமல் அவர்களின் புத்திரர்களைப் போல நாம் நடப்பது தகுதி யாகு மென்று சொல்லிப் பரிசுத்தத்தை யுடையவர்களான அவர்க ளியாவரும் திடத்தைக் கொண்டார்கள்.

 

3002. போற்றிநின் றனைவரும் புந்தி யாமெனத்

     தேற்றமுற் றியல்புடன் செப்ப நந்நபி

     மாற்றல ரெனுங்குபிர் மாய்க்கும் பீசபீற்

     கேற்றவை யாவையு மியற்று மென்றனர்.

9

      (இ-ள்) அசுஹாபிக ளான அவர்களி யாவரும் அவ்வாறு நின்று புகழ்ந்து இஃது அறிவாகு மென்று தெளித லடைந்து இயல்போடுங் கூற, நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் சத்துராதிக ளென்று சொல்லும் காபிர்களைக் கொல்லுகின்ற ழுபீசபீல்ழு என்னும் யுத்தத்திற்குப் பொருந்தியவைகளான எல்லாவற்றையு மியற்றுங்களென்று கூறினார்கள்.

 

3003. கொற்றவெண் கவிகையுங் கோல மார்துகில்

     சுற்றிய வட்டமுந் தூங்கு குஞ்சமுங்

     கற்றையங் கவரியுங் கதிர்செய் மாமணி

     வெற்றிவெண் டுவசத்தின் பேத வீக்கமும்.

10