இரண்டாம் பாகம்
(இ-ள்) அவ்வாறு கூற, வெண்ணிறத்தை
யுடைய வெற்றிக் குடைகளும் சித்திரத்தைப் பொருந்திய வத்திரத்தினால் பொதியப்பட்ட ஆல வட்டங்களும்
தூங்குகின்ற குஞ்சங்களும், அழகிய மயிர்த் தொகுதியினாற் செய்யப்பட்ட சாமரங்களும், ஒளிவைச்
செய்கின்ற பெருமை பொருந்திய இரத்தினங்க ளழுத்திய வெள்ளிய வெற்றிக் கொடிகளின் பகுப்பினது
பெருக்கமும்.
3004.
தடமுறு பதலையுந் தவிலுந் தாளமு
மிடியென முழங்குபே ரிகையு
மோர்புறத்
திடிமனுந் தகுணிதஞ் சிறந்த
பீலியும்
வடிவுடைக் காளமும் வயிருஞ்
சின்னமும்.
11
(இ-ள்) பெருமை பொருந்திய
பதலைகளும், தவில்களும், தாளங்களும், இடியைப் போலும் ஒலிக்கா நிற்கும் பேரிகைகளும், ஒரு பக்கத்தை
யுடைய திடிமன்களும், வாச்சியங்களிற் சிறப்புற்ற பீலிகளும், அழகை யுடைய காளங்களும், ஊது
கொம்புகளும், சங்குகளும்.
3005.
வட்டணந் தட்டிநீள் வள்ளித்
தண்டைதோல்
கட்டிய தோற்பரங் கவசங்
கீசகம்
புட்டில்கைச் சோடிணை தாக்குப்
போர்வைவெண்
பட்டினிற் பஞ்சுவைத் தடைக்குப்
பாயமும்.
12
(இ-ள்) பரிசைகளும், கேடகங்ளும்,
நீண்ட வள்ளி யாகிய தண்டைகளும் புயங்களில் வீக்கிய தான ஒப்பற்ற புயக் கவசங்களும், உடற்
கவசங்களும், தலை பாகைகளும், அம்பறாத் தூணிகளும், இரு கைக் கவசங்களும், உரத்தைக் கொண்ட
போர்வைகளும், வெண்ணிறத்தை யுடைய பட்டில் பஞ்சை வைத்து அடைத்த குப்பாயங்களும்.
3006.
பட்டையந் தோமரம் பரசு கப்பணுஞ்
சொட்டைவா ளயிறனுச் சுரிகை
முப்பிடி
நெட்டிலைச் சூலங்கோல் பால
நேமிசூழ்
கட்டுபத் திரஞ்சரஞ் சுழற்று
கைக்கவண்.
13
(இ-ள்) பட்டையங்ளும்,
தண்டங்களும், கோடாலிகளும், கப்பணங்களும், சொட்டைகளும், வாட்களும், வேற்களும், விற்களும்,
கத்திகளும் மூன்று பிடியளவாகிய நெடிய இலைகளையுடைய சூலங்களும், தடிகளும், மழுக்களும், சக்கரங்களும்,
சூழ்ந்த கட்டுகளையுடைய பத்திரங்களும், அம்புகளும் கைகளினாற் சுழற்றுகின்ற கவண் கற்களும்.
|