இரண்டாம் பாகம்
3007.
ஆடலம் பரிபரிக் கணிக
ளியாவையுந்
தேடின ரியற்றினர் சேனை
காக்குதற்
கீடுடை யவரிவ ரென்ன நன்னபி
கூடிய பெயரினிற் குறித்துக்
காட்டினார்.
14
(இ-ள்) நடனத்தைச் செய்கின்ற
அழகிய குதிரைகளும், அக்குதிரைகளுக்குள்ள, ஆபரணங்ளு மாகிய எல்லாவற்றையுந் தேடி யியற்றினார்கள்.
சேனையைக் காக்குதற்கு வல்லமையை யுடையவர் இன்னா ரென்று நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி
முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அங்கு கூட்டமுற்ற ஜனங்களிற் குறிப்பிட்டுக்
காட்டினார்கள்.
3008.
அரணடு கடகரி யனைய நால்வரு
முரணரி பொருவுமு காசி ரீன்களுந்
தரியல ருயிருணன் சாரி மார்களு
நரபதி நபியுட னிருக்கு நாளினில்.
15
(இ-ள்) அவ்வாறு காட்டிக்
கோட்டை மதிற்களை யிடிக்கா நிற்கும் மதத்தைக் கொண்ட யானைகளுக் கொப்பாகிய அபூபக்கர் சித்தீகு
றலி யல்லாகு அன்கு, உமறு கத்தாபு றலியல்லாகு அன்கு, உதுமா னிபுனு அப்பான் றலி யல்லாகு அன்கு,
அலியிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு ஆகிய நான்கு பேர்களும், அமையாமையை யுடைய சிங்கத்தை
நிகர்த்த, முகாஜிரீன்களும் சத்துராதிகளின் ஆவியை அருந்துகின்ற அன்சாரீன்களும், மனுஷாதிப
ரான நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களோடு
இருக்கின்ற காலத்தில்.
3009.
செறுநர்வத் தானெனுந் தலத்திற்
சேர்கிலாக்
குறைசிகள் பலருங்க னானிக்
கூட்டமு
மறமுடன் றிரண்டன ரென்னும்
வாசக
மிறையவன் றிருநபிக் கெடுத்துக்
கூறினார்.
16
(இ-ள்) தூதுவர்கள் யாவற்றிற்கு
மிறைவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் தெய்வீகந் தங்கிய நாயகம் நபிகட் பெருமானார் நபி
முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களுக்குப் பொருந்தாத பகைவராகிய பல குறைஷிக்
காபிர்களும் கனானிக் கூட்டத்தார்களும் கோபத்தோடும் வத்தானென்று கூறுந் தானத்தின் கண் வந்து
கூடினார்களென்று சொல்லும் வாசகத்தை எடுத்துக் கூறினார்கள்.
|