பக்கம் எண் :

சீறாப்புராணம்

1113


இரண்டாம் பாகம்
 

3010. மாற்றலர் முதற்படை திரண்டு வைகிய

     கூற்றினை யுணர்வொடுங் குறித்தஸ் காபிகள்

     சீற்றமுற் றவ்வயின் செல்கு வோமெனச்

     சாற்றலு முகம்மதுந் தகுமென் றோதினார்.

17

      (இ-ள்) துவக்க மாகச் சத்துராதிக ளாகிய அந்தக் காபிர்களின் சேனையானது அவ்வாறு ஒன்றுகூடி அங்கு தங்கிய சமாச்சாரத்தை அசுஹாபிமார்கள் தங்களின் அறிவோடும் ஆலோசித்து கோபமடைந்து அவ்விடத்திற்கு நாமும் போகுவோ மென்று சொல்லிய வளவில் நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லலாகு அலைகி வசல்ல மவர்களும் இவ்வார்த்தை தகுதியான தென்று சொன்னார்கள்.

 

3011. தீட்டிய செழும்படைச் சேனை வீரரை

     வீட்டிவெங் களத்திடைப் பருந்துக் கேவிருந்

     தூட்டிய வேற்கையு பாத செய்தவங்

     கூட்டிய தெனவுரு வெடுத்த கோலத்தார்.

18

      (இ-ள்) அவ்விதஞ் சொல்லித் தீட்டிய செழிய ஆயுதங்களைக் கொண்ட படை வீரர்களைக் கொடிய யுத்தக் களத்தினிடத்திற் கொன்று பருந்துகளுக்கு விருந்தாக அருந்திய வேலாயுதத்தைத் தாங்கிய கையையுடைய உபாதா வென்பவரின் நல்ல தவங்கள் கூட்டியதைப் போன்ற வடிவத்தை எடுத்த சாயலை யுடையவரும்.

 

3012. காதலுற் றிரப்பவர் கருத்துத் தேக்குற

     வீதலுக் கிசைந்தெடுத் தளிக்குஞ் செங்கையார்

     போதமும் வீரமும் புகழும் தூங்கிய

     சாதன சகுதெனுந் தரும வேந்தரே.

19

      (இ-ள்) ஆவலுற்று யாசிப்பவர்களின் சிந்தனையானது முற்றும் வண்ணம் கொடுப்பதற்குப் பொருந்தி எடுத்துக் கொடா நிற்கும் சிவந்த கையையுடையவருமான அறிவும் வல்லமையும் கீர்த்தியும் தூங்கப் பெற்ற சாதனத்தைக் கொண்ட சகுதென்று கூறும் புண்ணியத்தை யுடைய அரச ரானவர்.

 

3013. அன்னவர் தமைமதி னாவிற் காதியா

     மன்னபி முகம்மதங் கிருத்தி வைத்ததாள்

     பின்னிடா தடுஞ்சரம் பெய்யும் வீரர்க

     டுன்னிட வெழுந்தனர் துதிக்க யாவுமே.

20

      (இ-ள்) அந்தச் சகு தென்ற நாமத்தை யுடையவரே நபிகட் பெருமானாரான நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் திரு மதீனமா நகரத்திற்கு அரசராக அவ்விடத்திலிருக்கும்படி செய்து வைத்த பாதங்களைப்