பக்கம் எண் :

சீறாப்புராணம்

1114


இரண்டாம் பாகம்
 

பின்னிடாமற் கொல்லுகின்ற அம்புகளைப் பொழியா நிற்கும் வீரர்களாகிய அசுஹாபிமார்கள் நெருங்கவும், யாவும் துதிக்கவும், எழுந்தார்கள்.

 

3014. குடைகளுந் துவசமுங் குழுமி யோங்கிடக்

     கடுவிசைப் பரிக்குழாங் கலந்து முன்செலச்

     சுடர்விடு படைக்கலஞ் சுமந்த கொற்றவர்

     புடையெழத் திருநகர்ப் புறத்திற் றோன்றினார்.

21

      (இ-ள்) அவ்வா றெழும்பிச் சத்திரங்களும் கொடிகளும் கூட்டமுற்று ஓங்கவும், கொடிய விசையைக் கொண்ட குதிரைக் கூட்டங்கள் ஒன்றோடொன்று கலப்புற்று முன்னாற் செல்லவும், பிரகாசத்தை விடாநிற்கும், ஆயுதங்களைத் தாங்கிய அரசர்களாகிய அசுஹாபிமார்கள் எழுந்து பக்கங்களில் வரவும், தெய்வீகந் தங்கிய அந்த மதீனமா நகரத்தினது வெளியில் வந்து சேர்ந்தார்கள்.

 

3015. படியிடத் தெழுந்துகள் புயலிற் பம்பவா

     னிடியென முரசுபல் லியங்க றங்கக்கூர்

     வடிநெடுங் கதிரயின் மலிந்து மின்னிடக்

     கொடியவர் திசையினைக் குறுகி னாரரோ.

22

      (இ-ள்) அவ்விதம் வந்து சேர்ந்த அவர்கள் பூமியின்கண் ணிருந்தெழும்பும் தூசிகள் மேகத்தைப் போலும் ஆகாயத்திற் பரவவும், இடியைப் போலும் முரசுகளும் பல்லியங்களும் சத்திக்கவும், மிகுந்த கூர்மையையும் நீண்ட பிரகாசத்தையுமுடைய வேலாயுதங்கள் மலிதலுற்றுப் பிரகாசிக்கவும், கொடுமையையுடையவர்களான அந்தச் சத்துராதிகளின் திக்கிற் போய்ச் சேர்ந்தார்கள்.

 

3016. சேனையும் வாசியுஞ் செருமிச் சூழ்தரு

     கானர ணனைத்தையுங் கடந்து சென்றுக

     னானியர் குறைசிக ணடுந டுங்கவத்

     தானெனும் பெயருடைத் தலத்தைச் சுற்றினார்.

23

      (இ-ள்) படைகளையும், குதிரைகளையும் நெருக்கி வளைந்த காட்டினிடத்துள்ள கோட்டை மதில்க ளெல்லா வற்றையும் அவ்வாறு தாண்டிப் போய்க் கனானிக் கூட்டத்தார்களும் குறைஷிக் காபிர்களும் நடு நடுங்கும் வண்ணம் வத்தா னென்று சொல்லும் நாமத்தை யுடைய தானத்தை வளைந்தார்கள்.

 

3017. ககனவெங் கதிரவன் கரங்க டூளியிற்

     புகவிட மிலையெனப் பொருந்து மன்னவர்

     தொகுதியும் வாசியுஞ் சுற்றுஞ் சேனையு

     மகுசிகண் டுளத்திடை மலைத்திட் டானரோ.

24