இரண்டாம் பாகம்
வண்டுகளை யுடைய வெவ்விய ஓர்
காட்டின் கண் போய்ச் சேர்ந்தான்.
3295.
ஓங்கிய நெடுங்கடத் தொளித்துப்
போயின
னீங்கிருந் தென்பல னென்ன
நந்நபி
தாங்கரும் புரவியுந் தானை
வீரரும்
வாங்குமி னெனமதி னாவில்
வந்துற்றார்.
20
(இ-ள்) அவன் அவ்வாறு
போக, நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகி வசல்ல மவர்கள் அந்த மசுதிய் யென்பவன் பெருகிய நீண்ட கானகத்தி னிடத்து மறைந்து சென்றான்.
நாம் இவ்விடத்திலிருந்து பிரயோசனம் யாது? ஒன்று மில்லை யென்று தாங்குதற் கரிய குதிரைப்
படையும் காலாட் படையும் இதை விட்டும் நீங்கிச் செல்லுங்க ளென்று கட்டளையிட்டுத் திரு மதீனமா
நகரத்தில் வந்து சேர்ந்தார்கள்.
|