இரண்டாம் பாகம்
சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள்
ழுபிஸ்மில்லா ஹிர்றஹ்மா னிர்றஹீழு மென்றோதினார்கள். உடனே சிவந்த மெல்லிய நான்கு விரற்களி
னிடையில் நின்றும் சொர்க்க லோகத்தினது ஹௌலுல் கௌத றென்னும் ஆறா னது பொழிகின்ற நல்ல
அருவியைப் போன்று நீரானது தோற்றமாகி யெழும்பிற்று.
3292.
சுருதிவல் லவனருள் சுரந்த நந்நபி
விரலிடை நதியெனப் பிறந்த
வெள்ளத்தாற்
பரலழற் பாலையைப்
போக்கிப் பண்ணைசூழ்
மருதநன் னிலமென வளமுண் டாயதே.
17
(இ-ள்) வேத வல்லவனான
ஜல்ல ஷகுனகு வத்த ஆலாவின் காருண்ணிய மானது பூரணப்பட்ட நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் விரல்களினிடையி லிருந்து ஆற்றைப்
போலுமுண்டாகிய நீரினால் அவ் வூரானது தன்னிடத் துள்ள பரற் கற்களையும் வெப்பத்தையுங் கொண்ட
பாலை நிலங்களை யொழித்து வயல்களாற் சூழப் பெற்ற நல்ல மருத நிலத்தைப் போலும் வளமான துண்டாகப்
பெற்றது.
3293.
பரிகளொட் டகஞ்சுமை பரித்த
நந்திக
ளரிதினிற் குடித்தரு மயாவுந்
தீர்ந்தன
திருநபி முகம்மதுஞ் சேனை
வீரரும்
வரநதி யிடத்தினிற் றொழுது
வாழ்த்தினார்.
18
(இ-ள்) அன்றியும், குதிரைகளும்
ஒட்டகங்களும் சுமைகளைத் தாங்கிய எருதுகளும் அந்த நீரை அரிதி லருந்தி அருமையான தங்களின் தளர்வையு
மில்லாமற் செய்தன. தெய்வீகந் தங்கிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல்
சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களும், சேனை வீரர்களாகிய அசுஹாபி மார்களும் வரத்தைப் பொருந்திய
அந்த ஆற்றினிடத்தில் உலுச் செய்து அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவைத் தொழுது புகழ்ந்தார்கள்.
3294.
இவ்வண்ண மூன்றுநா ளிருக்கு மெல்வையின்
மைவண்ணத் துள்ளத்து மசுதிய்
யென்பவன்
செவ்விய ரறிகிலா தொளித்துத்
தேடருங்
கவ்வைசெய் நெடிபடு கானம்
போயினான்.
19
(இ-ள்) இந்தப் படியாக
மூன்று நாளிவர்களிருக்கின்ற சமயத்தில், குற்றம் பொருந்திய குணத்தைக் கொண்ட இதயத்தையுடைய
அந்த மசுதிய் யென்பவன் செவ்வியர்களான இவர்களறியாது மறைந்து தேடுதற் கரிய ஒலித்தலைச் செய்கின்ற
சிள்
|