இரண்டாம் பாகம்
(இ-ள்) பெருமையிற் சிறந்த
நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அவ்வாறு
துஆச் செய்து மண்ணாற் பொருந்திய ஓர் பாண்டத்தை எடுத்துக் கொண்டு வாருமென்று உத்திரவு செய்தலும்,
குளிர்ச்சி தங்கிய புஷ்ப மாலை யணிந்த தோள்களையுடைய சாபி றென்னும் நாமத்தைக் கொண்ட
அரசரான அவர் தமது மனத்தி னிடத்து நிறைந்த சந்தோடத் தோடும் விரைந்து சென்று அவ்விதமே ஓர்
பாண்டத்தைக் கொண்டு வந்து விருப்பத்துடன் வைத்தார்.
3289.
புதுநறும் பானையின் வாயிற்
பொற்புறப்
பதுமமென் கரவிரற் பரப்பி
மூடிநின்
றிதமுறுந் துருத்தியை யெடுத்துக்
கையின்மேல்
விதமுறக் கவிழ்த்தென
விளம்பி னாரரோ.
14
(இ-ள்) அவ்வாறு கொண்டு
வந்து வைத்த புதிய வாசனையைக் கொண்ட அந்தப் பானையினது வாயில் அழகானது பொருந்தும் வண்ணம்
தாமரை மலரை நிகர்த்த மெல்லிய தங்களின் கையினது விரற்களை பரப்பி மூடி அந்தச் சாபிர் றலி
யல்லாகு அன்கு அவர்களை நீவிர் நின்று நன்மை பொருந்திய அந்தத் துருத்தியை இக் கையின் மீது
எடுத்து வித முறக் கவிழ்த்துமென்று கட்டளை யிட்டார்கள்.
3290.
விடுமென வுரைத்தலும் வெறுந்து
ருத்தியைக்
கடநிறை விரலின்மேற் கவிழ்ப்ப
வுள்ளுறைந்
திடுதுளி யொன்றிமே லின்றி
வீழ்ந்தது
படுமிட நீரெனும் பான்மை தோன்றவே.
15
(இ-ள்) அவ்விதம்
விடுமென்று கட்டளை செய்த மாத்திரத்தில் அவர் வெறுமையான அந்தத் துருத்தியை அப்பாண்டத்தின்
மீது நிறைத்த விரற்களின் மேற் கவிழ்க்க, அத் துருத்தியினுள் தங்கிய நீர்த் திவலையானது ஒன்றுக்
கதிகமின்றி அஃது பட்ட விடம் நீரென்று சொல்லும் தன்மையானது தோன்றும் வண்ணம் வீழ்ந்தது.
3291.
கையின்மே லொருதுளி கான்ற
போழ்தினின்
மெய்யொளி முகம்மது பிசுமி
லோதினர்
செய்யமென் விரலிடை நான்கிற்
சேணதி
பெய்யுநல் லருவிபோற் பிறந்தெ
ழுந்ததே.
16
(இ-ள்) அவ்வாறு கையின்
மீது ஓர் திவலை யானது விழுந்து பிரகாசித்த சமயத்தில், திரு மேனியினது ஒளிவை யுடைய நமது நாயகம்
நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல்
|