பக்கம் எண் :

சீறாப்புராணம்

1216


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு போய்ச் சேர்ந்த வேத வசனங்களை யுடைய கொற்றவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் நபியாகிய நாயகம் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களோடும் சேனைக் கூட்டங்கள் குறையாத பெரிய கீர்த்தியையுடைய திரு மக்கமா நகரத்தினது சத்துராதிகளான அக் காபிர்கள் ஷா மிராச்சியத்திற்குச் செல்லும் மார்க்கத்தின் கண் சுற்றிலு மிறங்கினார்கள்.

 

3306. இலக சீறாவினி லிரண்டு நாளிருந்

     துலவிய வொற்றரா லுணரு மொல்லையிற்

     பலபல திசையவர் படர்ந்து சாவியே

     நலனுறு முகம்மது நபிமு னெய்தினார்.

11

      (இ-ள்) அவ் வண்ண மிறங்கி வலிமை பொருந்திய அசீறா வென்னும் அந்தத் தானத்தின் கண் இரண்டு நாள் வரை யிருந்து எவ்விடத்து முலாவிச் சென்ற தூதர்களா லுணரா நிற்குஞ் சமயத்தில், அந்தத் தூதர்கள் பற்பல திசைகளில் நடந்து சென்று விசாரித்து நன்மை பொருந்திய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் சந்நிதானத்தில் வந்து சேர்ந்தார்கள்.

 

3307. முதல்வநம் படைவர மூன்று நாட்குமுன்

     பொதியெரு தொட்டகம் புடையிற் பொங்கவே

     நிதியொடும் போயின நிகரில் சாமெனும்

     பதியினுக் கெனப்பதம் பணிந்து சொல்லினார்.

12

      (இ-ள்) அவ்வாறு சேர்ந்து படைப்பினங்கள் யாவற்றிற்கும் முதன்மையான நபிகட் பெருமானே! இங்கு நமது சேனை யானது வந்து சேருவதற்கு மூன்று தினங்களுக்கு முன்னர் ஒப்பில்லாத ஷா மென்று சொல்லும் இராச்சியத்திற்கு அந்தக் காபிர்களின் சேனையானவை மூட்டைகளைத் தாங்கிய எருதுகளும் ஒட்டங்கங்களும் பக்கங்களில் அதிகரித்து வரும் வண்ணம் திரவியத் தோடுஞ் சென்றனவென்று அவர்களின் திருவடிகளில் தாழ்ந்து சொன்னார்கள்.

 

3308. பரதிசை திரிபவர் பகரக் கேட்டவண்

     கரநதி தருநபி யிருக்குங் காலையிற்

     பெருகுமவ் விடத்தவர் கூடிப் பெட்புற

     மரைமல ரிணைப்பதம் வந்து நண்ணினார்.

13

      (இ-ள்) பிற திக்குகளில் திரிந்து விசாரிக்கக் கூடியவர்களான அந்தத் தூதர்களும் அவ்வாறு சொல்ல, விரற்களினிடையில் நின்றும் ஆற்றை வரவழைத்த நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி