பக்கம் எண் :

சீறாப்புராணம்

1217


இரண்டாம் பாகம்
 

முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் கேள்வியுற்று அந்த அசீறா வென்னும் தானத்தின் கண் உறையுஞ் சமயத்தில், ஓங்கா நிற்கும் அந்த வூரை யுடையவர்கள் ஒன்று சேர்ந்து அன்பானது பொருந்தும் வண்ணம் தாமரை மலரை நிகர்த்த அவர்களின் இரு பாதங்களிலும் வந்து சேர்ந்தார்கள்.

 

3309. பேர்பனீ முத்லசு வென்னும் பேருட

     னார்பனீ லமுறத்தென் பவரு மாண்டுறப்

     போரறத் தன்மையிற் படுத்திப் பொற்புடன்

     றார்கெழும் புயநபி தருக்கின் மீண்டனர்.

14

      (இ-ள்) கீர்த்தியைக் கொண்ட பனீ முத்லசு வென்று சொல்லும் பேரொடு அவ் வூரில் தங்கிய பனீ லமுறத் தென்று சொல்லப் பட்ட கூட்டத்தாரும் அவ்வாறு அங்கு வந்து சேர, அவர்களைச் சண்டையில்லாமல் ஒரே குணமுடையவர்களாக அழகோடும் வாழும்படி செய்து மாலைகளைப் பொருந்திய தோள்களையுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி ஹபீபு றப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் சந்தோஷத்துடன் அத் தலத்தை விட்டுந் திரும்பினார்கள்.

 

3310. முரசமும் பேரிய முழங்கத் தாவிய

     பரிகளு மன்னவர் பலருஞ் சூழ்வர

     நரலையை நிகர்திரு நகரை நோக்கியே

     வரும்வழி யினிலொரு வசனங் கேட்டனர்.

15

      (இ-ள்) அவ்வாறு திரும்பி முரசங்களும் மற்ற பெரிய வாச்சியங்களும் ஒலிக்கவும், தாவிச் செல்லுகின்ற குதிரைப் படையும் அரசர்களான நல்ல அசுஹாபிமார்களும் சூழ்ந்து வரவும், சமுத்திரத்தை யொத்த தங்களின் பட்டினமாகிய தெய்வீகந் தங்கிய திரு மதீனமா நகரத்தை நோக்கி வருகின்ற மார்க்கத்தில் ஓர் சமாச்சாரத்தைக் கேள்வி யுற்றார்கள்.

 

3311. துறுமலர்ப் பொழிறிகழ் மதீனஞ் சுற்றிய

     சிறுகுடிப் பாடிக டிடுக்குற் றேங்கிடப்

     பெறுநிரை யனைத்தும் பிடித்துத் தெவ்வரிற்

     குறுசெனு மவன்கொடு போயி னானென்றே.

16

      (இ-ள்) நெருங்கிய புஷ்பங்களைக் கொண்ட சோலைகளானவை பிரகாசியா நிற்கும் திரு மதீனமா நகரத்தைச் சூழ்ந்த சிறிய குடிகளாகிய முல்லை நிலத் தூர்களிலுள்ள இடையர்கள் திடுக்க முற்று இரங்கும் வண்ணம் அவர்கள் பெற்ற இடையர்கள் திடுக்க முற்று இரங்கும் வண்ணம் அவர்கள் பெற்ற பசுக் கூட்டங்க ளெல்லாவற்றையும் சத்துராதிக ளான காபிர்களில் குறு சென்று சொல்லப் பட்டவன் பிடித்துக் கொண்டு சென்றானென்று.