பக்கம் எண் :

சீறாப்புராணம்

1218


இரண்டாம் பாகம்
 

3312. குரைகட லெனநிரை கொண்டு போயதோர்

     தருமுகி றவழ்சபு வானென் றோங்கிய

     வரையடி வாரத்தை நோக்கி மானபி

     பொருவில்வெம் படையொடும் போயி னாரரோ.

17

      (இ-ள்) ஒலிக்கா நிற்குஞ் சமுத்திரத்தைப் போன்ற பசுக் கூட்டங்களை அவ்வாறு கொண்டு சென்றதான ஒப்பற்ற விருக்கங்களை யுடைய மேகங்க ளானவை தவழா நிற்கும் சபுவா னென் றோங்கிய மலையினது அடி வாரத்தைப் பார்த்துப் பெருமை பொருந்திய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் ஒப்பில்லாத றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் ஒப்பில்லாத வெவ்விய தங்களின் சேனை யோடும் சென்றார்கள்.

 

3313. இறையவ னுரைவழி யற்றுந் தூதுவர்

     மறைமுதிர் படையொடும் வருகின் றாரெனக்

     குறுசெனு மவனிரைக் குழுவு மூரும்விட்

     டுறைவதில் லெனவொளித் தோடி னானரோ.

18

      (இ-ள்) கடவு ளான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் கட்டளையின் பிரகாரம் செய்யா நிற்கும் றசூ லாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் புறுக்கானுல் அலீ மென்னும் வேதத்திற்றேர்ச்சி யடைந்த தங்களின் சேனையோடும் அவ்வாறு வருகின்றார்க ளென்று தெரிந்து குறு சென்று சொல்லப்பட்ட அவன் அந்தப் பசுக் கூட்டங்களையும் அவ் வூரையும் விட்டு இனி இங்குத் தங்கியிருப்பதில்லை யென்று மறைந்து விரைந்து சென்றான்.

 

3314. வலனுற வருஞ்சபு வானெ னும்பெரு

     மலையடி வாரத்தின் வந்தவ் வூரிடை

     நிலைகொளு நிரையெலாங் கொண்டு நீணபி

     சிலையயிற் படையொடுந் திரும்பி னாரரோ.

19

      (இ-ள்) அவன் அவ்வாறு செல்ல, பிரகாசத்தைக் கொண்ட நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் கோதண்டத்தையும் வேலாயுதத்தையு முடைய தங்களின் சேனையோடும் வெற்றியானது பொருந்தும் வண்ணம் தாங்கள் நாடி வந்த அந்தச் சபுவானென்று சொல்லும் பெரிய மலையினது அடி வாரத்தில் வந்து அவ் வூரினிடத்துத் தரித்து நின்ற அப் பசுக் கூட்டங்களெல்லாவற்றையுங் கொண்டு திரும்பினார்கள்.