இரண்டாம் பாகம்
3315.
கல்லடை திடருமுட் காடுங் கண்ணறாச்
செல்லடை நெடுவரைத் திகிரிச்
சூழலு
மெல்லவன் கதிர்கிடந் தெரியும்
பாலையு
முல்லையுங் கடந்தொரு
பொழிலை முன்னினார்.
20
(இ-ள்) அவ்விதந் திரும்பிக்
கற்க ளானவை யோங்கப் பெற்ற திடர்களையும், முட்களை யுடைய காடுகளையும், மேகங்களானவை நீங்காமல்
தங்குகின்ற நெடிய மலைகளினது மூங்கிற் கொல்லைகளையும், சூரியனது கிரணங்களானவை கிடந்து எரியா
நிற்கும் பாலை நிலங்களையும், முல்லை நிலங்களையுந் தாண்டி ஒரு சோலையினிடத்து வந்து சேர்ந்தார்கள்.
3316.
சேந்தன செழுங்கனி சிதறச்
சிந்திய
வீந்தடல் பொழிலிடத் திறங்கி
நந்நபி
யாய்ந்தநல் லறிவின ரமச்ச
ரின்புற
வாய்ந்ததோர் பத்திரம்
வரைந்து கட்டினார்.
21
(இ-ள்) நமது நாயகம் நபிகட்
பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அவ்வாறு வந்து சேர்ந்து
நெருப்பினது செந்நிறத்தை யொத்த செழிய பழங்களைச் சிதறும் வண்ணஞ் சிந்துகின்ற ஈத்த மரங்கள்
நெருங்கிய அந்தச் சோலையினிடத்து இறங்கி அங்குத் தேர்ச்சியடைந்த நல்ல அறிவையுடைய
அசுஹாபிமார்களும் மந்திரிகளாகிய யார்களும் அகமகிழ்ச்சி யுறும் வண்ணம் சிறந்ததான ஒப்பற்ற
ஓர் நிருபத்தை யெழுதிக் கட்டினார்கள்.
3317.
அகிலமன் னப்துல்முத் தலிபுக்
கன்புறு
மகள்மகன் அப்துல்லா வென்னு
மன்னரை
யிகலறு மனத்தவ ரிருத்தி முத்திரைத்
தகுதியிற் பத்திரங் கொடுத்துச்
சாற்றினார்.
22
(இ-ள்) அவ்வாறு கட்டிய
விரோத மற்ற இதயத்தையுடையவர்களான நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகி வசல்ல மவர்கள் இவ் வுலக முழுவதுக்கும் அரசராகிய அப்துல் முத்தலி பென்பவருக்கு அன்பால்
மிகுத்த புத்திரியினது புதல்வ ரான அப்துல்லா றலி யல்லாகு அன்கு என்று சொல்லும் இராஜ ரானவரை
அழைத்து முன்னா லிருக்கும் படி செய்து முத்திரையினது தகுதியை யுடைய அந்த நிருபத்தைக் கொடுத்துச்
சொன்னார்கள்.
3318.
பாடிபத் துனுநகு லாவிற்
பாங்குறக்
கூடியங் குறைந்துகைக் கொடுத்த
பத்திர
மூடிய முத்திரை முறித்துப்
பாசுரஞ்
சூடிய வுரைவழி துணிமி னென்றரோ.
23
|