இரண்டாம் பாகம்
(இ-ள்) நீவிர் பத்துனு
நகுலா வாகிய ஊரின் கண் அழகானது பொருந்தும் வண்ணம் போய்ச் சேர்ந்து அங்குத் தங்கி உமது கையிலீந்த
இந்த நிருபத்தை மூடிய முத்திரையை உடைத்து வசனமாக அதிற் சூடிய வார்த்தைகளின் பிரகார முயலு மென்று.
3319.
கண்ணெனப் பிரிவின்மு காசி
ரீன்களி
லெண்மரை யவர்மொழிக் கிணங்கச்
சேர்த்தினி
துண்மகிழ் தரவவ ணுறைகு
வீரென
மண்ணகம் புகழ்முகம் மதுவ னுப்பினார்.
24
(இ-ள்) இப் பூமியின்
கண்ணுள்ள சகல ஜீவ ராசிகளுந் துதிக்கா நிற்கும் நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தங்களின் நேத்திரங்களைப் போலும் தங்களை
விட்டும் நீங்காத முஹாஜிரீன்களில் எட்டுப் பெயரை அந்த அப்துல்லா றலி யல்லாகு அன்கு அவர்களின்
கட்டளைக்குச் சம்மதித்து நடக்கும் படி அவர்களோடு பொருத்தி நீங்கள் இனிமையோடும் மன மானது
சந்தோஷ மடையும் வண்ணம் அங்குத் தங்கியிருப்பீர்களாக வென்று கட்டளை யிட்டு அனுப்பி வைத்தார்கள்.
3320.
நாயக ருரைத்தவை யுளத்தி னாட்டிநற்
றூயவ ரெண்மரும் பரிவிற் சூழ்வரப்
பாயரித் துவசமுன் படரப்
போயினர்
சீயமொத் தப்துல்லா வென்னுஞ்
செம்மலே.
25
(இ-ள்) நாயக ராகிய நபி
முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அவ்வாறு கூறிய வார்த்தைகளை அப்துல்லா
றலி யல்லாகு அன்கு என்று சொல்லும் அரச ரானவர்கள் தங்களி னிதயத்தின் கண் நிற்கச் செய்து
நல்ல பரிசுத்தத்தை யுடையவர்களான அந்த முஹாஜிரீன்க ளெட்டுப் பெயரும் அன்போடும் தங்களைச்
சூழ்ந்து வரவும், பாய்கின்ற சிங்கக் கொடி யானது முன்னாற் செல்லவும், சிங்கத்தை நிகர்த்துச்
சென்றார்கள்.
3321.
தந்தைதம் முன்னவ டருமத் தால்வரு
மைந்தரை யவணிடை யனுப்பி
மன்னர்கோன்
சிந்திடத் துயர்வரை சிதறத்
தாக்கிக்கைப்
பந்தென வருந்திறற் பரியின்
மேற்கொண்டார்.
26
(இ-ள்) இராஜாதிபரான நாயகம்
நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தங்களின்
பிதா வாகிய அப்துல்லா வென்பவரது தமைக்கையா ரவர்களின் புண்ணியத்தினால் இவ் வுலகத்தின் கண்
வந்தவ தரித்த
|