பக்கம் எண் :

சீறாப்புராணம்

1326


இரண்டாம் பாகம்
 

ஏதுவாகக் கொலைத் தொழிலையுடைய நசுறானிகளும் எகூதிகளுமாகிய காபிர்கள் சம்மதிப்படக் கலப்பதற்குக் கூறிய வேதத்தினது சத்தியமென்று சொல்லும் சம்பந்தங்களை வேண்டாதீரென்று யாவற்றிற்கும் முதன்மையான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் ஆயத்தாகிய வேதவசனமு மிறங்கிற்று. அதை நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களும் அன்புடன் இனிமையோடு முவந்தார்கள்.

 

கலி விருந்தம்

 

3612. வலிகொடு காபிரை பதுறின் மாய்த்துநன்

     னிலைகெடுங் கயினுக்கா கவரை நீத்திடர்

     நலிவற முகம்மதாண் டிருக்கு நாளினிற்

     பொலிவுறச் சிலமொழி புகழு வாமரோ.

5

      (இ-ள்) பதுறென்னுந் தானத்தில் காபிர்களாகிய திரு மக்கமா நகரத்தினது சத்துராதிகளை வலிமை கொண்டு கொன்று நல்ல நிலைமையை விட்டுங் கெட்ட கயினுக்காஹென்னும் அந்தக் கூட்டத்தார்களது துன்பத்தை நீக்கி அந்தத் திரு மதீனமா நகரத்தில் நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் மெலிவில்லாது இருக்கின்ற காலத்தில் அழகுறும்படிச் சில வார்த்தைகளைச் சொல்லுவாம்.

 

3613. சாமினிற் புக்கிமா நிதியந் தன்னொடு

     மாமதிண் மக்கமா புரத்தின் வைகிய

     குவள பாசபி யான்வன் சொல்லினாற்

     றாமவொண் புயத்தவர்க் கெடுத்துச் சாற்றுவான்.

6

      (இ-ள்) ஷாமிராச்சியத்திற் போய்ப் பெருமை பொருந்திய திரவியங்களோடு பெரிய கோட்டை மதில்களையுடைய திரு மக்கமா நகரத்தில் வந்து தங்கிய சூமனாகிய அபாசுபியா னென்பவன் தனது கொடிய வாக்கினால் மாலையைத் தரித்த ஒள்ளிய தோள்களையுடைய மற்ற காபிர்களுக்கு எடுத்துக் கூறுவான்.

 

3614. பொன்னுநன் மணியுமொத் திலங்கும் பொற்பினாற்

     கன்னியர் காமுறுங் காளை வீரர்க

     ளென்னுயி ரனையரிப் புறத்துக் காதியா

     மன்னவர் பதுறினின் மடிந்திட் டாரரோ.

7

      (இ-ள்) பொன்னையும் நல்ல இரத்தினங்களையும் போன்று பிரகாசியா நிற்கும் ஒப்பனையினால் கன்னிப் பருவத்தையுடைய மாதர்கள் ஆசைப்படுகின்ற காளைப் பருவத்தினது வீர்களும்