இரண்டாம் பாகம்
வேறு இல்லையென்று சொல்லும்படி
வேகத்தில் கொள்ளை செய்து வாரினார்கள்.
3673.
மட்டறும் பண்ட மியாவு மலிதரச்
செறிந்து வைகு
மொட்டகைத் திரளி னேற்றி
யுறுநிரை யனைத்துஞ் சேர்த்து
விட்டுமுன் னடத்தி வேந்தர்
வீரர்வெம் பரியிற் சூழக்
கட்டழ கெறிக்குஞ் சோதிக்
காவலர் புறப்பட் டாரால்.
9
(இ-ள்) பேரழகையும் பிரகாசியா
நிற்கும் ஒளிவையுமுடைய அரசரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகி வசல்ல மவர்கள் அவ்வாறு வாரிய அளவற்ற பொருட்க ளெல்லாவற்றையும் பெருகும்படி ஒன்றாகச்
சேர்த்து அங்குத் தங்கிய கூட்டமாகிய ஒட்டகங்களின் மீதேற்றி மிகுத்த பசுக்கூட்டங்க ளியாவையும்
அதனோடு பொருத்தி விட்டு முன்னால் நடக்கச் செய்து மன்னர்களும் வீரர்களும் வெவ்விய குதிரைகளில்
தங்களை வளையும் வண்ணம் அங்கிருந்து புறப்பட்டார்கள்.
3674.
ஓலவா ரியின்ற டாரி முரசங்க
ளொலித்துப் பொங்க
நீலவொண் கவிகை மேக நிழறர
சலவாத் தார்ப்பக்
கோல்வளை யாது செய்து குவலய
முழுதுங் காத்த
மாலையொண் புயத்து வள்ளன்
மதீனமா புரத்தின் வந்தார்.
10
(இ-ள்) அவ்வாறு புறப்பட்ட
தங்களது செங்கோல் கோடாது அரசு புரிந்து இப்பூலோக முழுவதையும் புரந்த வெற்றி மாலையைத் தரித்த
ஒள்ளிய தோள்களையுடைய வள்ளலான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல்
சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் முழக்கத்தைக் கொண்ட சமுத்திரத்தைப் போலும் பேரிகைகளும்
முரசங்களுஞ் சத்தித்து ஓங்கவும், நீலநிறத்தையுடைய ஒள்ளிய மேகக்குடையானது நிழலைத் தரவும்,
சலவாத் தோசையானது முழங்கவும், திரு மதீனமா நகரத்தில் வந்து சேர்ந்தார்கள்.
3675.
கருதலர் பதியிற் புக்கிக்
கவர்ந்தபல் பொருளும் பங்கிற்
பிரிவிலா யார்கட் கீந்து
பிடித்தவொட் டகையைந் நூற்றின்
வரிமறை முறைநா னூறும் வரன்முறை
யினிதி னல்கிப்
பரிவினின் மற்ற நூறுந் தம்வசப்
படுத்தி னாரால்.
11
(இ-ள்) அவ்விதம் வந்து
சேர்ந்து சத்துராதிகளான அந்த பனீசுலைமுக் கூட்டத்தார்களது நகரமாகிய அக்குதிரியென்னு மூரிற்போய்க்
கொள்ளையாடிய பல பண்டங்களையும் பங்கில் நீங்காத நான்கு யார்களுக்குங் கொடுத்து அங்குப் பிடித்த
ஒட்டகங்க
|