பக்கம் எண் :

சீறாப்புராணம்

1373


இரண்டாம் பாகம்
 

சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது பசியானது தீரும்படி தகுதியோடுங் கொடுப்பதற்கு நமது வீட்டின்கண் யாதேனுமுளதா? என்று கேட்க, அந்தப் பெண்ணானவள் சிந்தை மகிழ்ந்து இனிமை யொழுகப் பெற்ற மூன்று கோதும்பை யுறட்டி யுள்ளனவென்று சொல்ல, அவர்கள் அதை வாங்கி மரியாதையோடும் அந்த நபிகட் பெருமான் சல்லல்லாகு அலைகிசவல்ல மவர்களது சந்நிதானத்திற் கொண்டு போய்க் கொடுமென்று அனசு றலியல்லாகு அன்கு அவர்களது கையில் கொடுத்தார்கள். 

 

3751. மோதகத்தை வாங்கியன சுவந்துதுகி

          லிடைபொதிந்து முருகு வாய்ந்த

     போதெனுமென் பதக்குரிசி லிடத்தேக

          முகம்மதுநற் புளகத் தோடுங்

     கோதிலபூத் தல்காவோ வனுப்பினர்நீ

          கொணர்ந்ததெவை கூறென் றோத

     வாதரத்தி னிவரவர்கை கொடுத்ததுவுங்

          கொணர்ந்ததுவு மறைந்திட் டாரால்.

3

      (இ-ள்) அவ்வாறு கொடுக்க, அவ்வனசு றலியல்லாகு அன்கு அவர்கள் மகிழ்ந்து அந்த வுறட்டியை வாங்கித் துணியினால் மூடித் தேனைப் பொருந்திய தாமரைப் புஷ்பமென்று சொல்லும் மெல்லிய திருவடிகளையுடைய பெருமையிற் சிறந்தோரான நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது சந்நிதானத்திற் செல்ல, அந்நாயகம் நபிகட்பெருமானவர்கள் நல்ல மகிழ்ச்சியோடும். குற்றமற்ற அபூத்தல்ஹா வென்பவரா? உன்னை இங்கு அனுப்பினார். நீ கொண்டு வந்துது யாது? சொல்லென்று கேட்க, ஆசையோடும் இந்த அபூத்தல்ஹா றலியல்லாகு அன்கு அவர்கள் அந்த அனசுறலியல்லலாகு அன்கு அவர்கள் கையில் கொடுத்ததையும் அவர்கொண்டுவந்த உறட்டியையுஞ் சொன்னார்கள்.

 

3752. அனசுரைத்த மொழிகேட்டு நன்கெனதீ

          னவர்சூழ வரசர் கோமான்

     வனசமலர்ப் பதம்பெயர்த்து வரிசையபூத்

          தல்காதன் மனையி னேக

     வெனபுதுமை யுஃதெனவந் தெதிரிறைஞ்சிக்

          கொடுபோயங் கிருத்திச் சார்ந்தோர்

     தமையுமுப சரித்துறையு மிற்புகுந்து

      மனைவியர்க்குச் சாற்று வாரால்.

4