இரண்டாம் பாகம்
(இ-ள்) அந்த
அனசுறலியல்லாகு அன்கு அவர்கள் அவ்வாறு கூறிய வார்த்தைகளை மன்னராதிபரான நமது நாயகம் நபிகட்பெருமானார்
நபிமுகம்மது முஸ்தபா றசூல்சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் கேள்வியுற்று நல்லதென்று சொல்லித்
தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தையுடைய அசுஹாபிமார்கள் சூழும் வண்ணம் தாமரைப் புஷ்பத்தை
நிகர்த்த தங்களது திருவடிகளைப் பெயர்த்துச் சங்கையையுடைய அந்த அபூத்தல்ஹா றலியல்லாகு அன்கு
அவர்களது வீட்டிற்செல்ல, அவர்கள் இஃது என்ன ஆச்சரியமென்று எதிராக வந்து பணிந்து கூட்டிக்
கொண்டு போய் அங்கு இருக்கும்படி செய்து அவ்விடத்திற் பொருந்திய மற்ற அசுஹாபிமார்களுக்கும்
மரியாதை பண்ணித் தங்கள் மனைவியார் தங்கிய வீட்டினகஞ்சென்று அவர்களுக்குச்
சொல்லுவார்கள்.
3753.
இகத்தினுமப் பரத்தினும்பே றுடையர்நம
தில்லினில்வந்
திருந்தா ரிந்த
ஒகுத்தினினன்
குணவருள வறியவரா
யிருந்தனமென்
றுரைத்த லோடு
மகத்தினிலுள்
ளதுமிலது மிறையவனு
மவன்றூது மறிவர்
நம்மாற்
பகுத்துரைப்ப தென்கொலெனப்
பசுங்கொடியுங்
கணவனுடன்
பகர்ந்தாள் மன்னோ.
5
(இ-ள்) இப்பூலோகத்திலும் அந்த வானலோகத்திலும்
பதவியை யுடையவர்களான நமது நாயகம் நபிகட்பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல்சல்லல்லாகு
அலைகி வசல்லமவர்கள் நமது வீட்டில் வந்து இருந்தார்கள். இந்த நேரத்தில் நல்ல ஆகாரத்தை
அவர்களுக்குக் கொடுக்க நாம் தரித்திரர்களாக இருக்கின்றோமேயென்று சொன்ன மாத்திரத்தில்,
அவர்களது மனைவியாரான பசிய கொடிபோல்பவர்கள் நமது வீட்டிலுள்ளதையும் இல்லாததையும்
யாவருக்குங் கடவுளான ஜல்லஜலாலகுவத்த ஆலாவும் அவனது றசூலாகிய அந்நாயகம் நபிகட்பெருமானார் நபிசல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களும் அறிவார்கள். நம்மாற் பிரித்து அவர்களுக்குச் சொல்லுவது யாது? ஒன்றுமில்லை,
என்று தங்கள் நாயகரான அந்த அபூத்தல்ஹா றலில்லாகு அன்கு அவர்களோடுஞ் சொன்னார்கள்.
3754.
துணைவனுங்கா தலியுமிவை
யுரைத்துமனத்
துயரொடுந்துன்
புறுமப் போதின்
மணமுலவு தனுவள்ள
லினிதினும்மு
சுலைமென்னு
மயிலைக் கூவி
|