பக்கம் எண் :

சீறாப்புராணம்

1375


இரண்டாம் பாகம்
 

     யுணவுளதே தெனினுமிவண் டருகவருந்

          தீனவர்க ளுடனு மியானு

     மணிபெறவிங் கிருந்தருந்தி யெழுவமென

          முகமனொடு மருளி னாரால்.

6

     (இ-ள்) நாயகராகிய அந்த அபூத்தல்ஹா அன்கு அவர்களும் அவர்களது நாயகி யாரவர்களும் இவ் வார்த்தைகளைப் பேசி மனவருத்தத்தோடும் வேதனைப்படுகின்ற அந்தச் சமயத்தில், கஸ்தூரிவாசனையானது உலாவா நிற்குங் காத்திரத்தையுடைய வள்ளலான நமது  நாயகம் நபிகட்பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல்சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் இனிமையோடும் உம்மு சுலைம் றலியல்லாகு அன்ஹா என்று சொல்லும் அந்த மயில் போல்பவர்களைக் கூப்பிட்டு யாதென்றாலு முள்ள ஆகாரத்தை இங்குக் கொண்டு வந்து தருவீர்களாக, அதை இங்கு வந்த அசுஹாபிமார்களோடு யானும்  அழகுபெற இவ்விடத்திலுறைந்து தின்றுவிட்டு எழுந்து செல்வோமென்று உபசார வார்த்தையோடுங் கூறினார்கள்.

 

3755. நனிபுதுமைக் குரிசிலுரை தரமகிழ்ந்து

          கனிமொழிநன் னுதலார் நின்ற

     அனசுகையி னிருந்ததையோர் பாத்திரத்தி

          னெய்யுடனங் கையி னேந்தி

     மனனுயிரின் மிக்கசெழுங் கணவரிடத்

          தினிதளிப்ப வாங்கி யன்னோர்

     கனைகடலுண் டெழுங்கவிகை நிழலில்வரு

          பவரிருகண் களிப்ப வைத்தார்.

7

      (இ-ள்) மிகுத்த அற்புதங்களையுடைய பெருமையிற் சிறந்தோரான நமது நாயகம் நபிகட்பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு கூற, கனியை நிகர்த்த வார்த்தைகளையும், நல்ல நெற்றியையுமுடைய அந்த உம்முசுலைம் றலி யல்லாகு அன்ஹா அவர்கள் சந்தோஷமடைந்து பக்கத்தில் நின்று அனசுறலியல்லாகு அன்கு அவர்களது கரத்திலிருந்த அவ்வுறட்டியை வாங்கி நெய்யோடும் ஓர் பாத்திரத்தில் வைத்து உள்ளங்கைகளில் தாங்கிக் கொண்டு தங்களது இதயத்தையும் பிராணனையும் பார்க்கிலும் மேன்மைப்பட்ட செழிய நாயகர் அபூத்தல்ஹா றலியல்லாகு அன்கு அவர்களிடத்தில் இனிமையோடுங் கொடுக்க, அவர்கள் அதை வாங்கிச் சத்திக்காநிற்குஞ் சமுத்திரத்தினது நீரையருந்தி எழுகின்ற மேகக்குடையினது நிழலில் வருகின்ற அந்நபிகட் பெருமானார்