பக்கம் எண் :

சீறாப்புராணம்

1451


இரண்டாம் பாகம்
 

மாலைகள் வீறுடன் தங்கிப் பிரகாசித்த இரத்தினங்க ளழுத்திய கிரீடத்தையுடைய மன்னர்களது கனத்தைக் கொண்ட புயங்களாகிய மலைகளிலும் போய் நுழைந்தன. 

 

3996. துற்று வெஞ்சர மெய்தெய்து தூணியுந் தொலைந்த

     வெற்றி வாட்படை யெறிந்தெறிந் தழிந்தன விலக்கிப்

     பற்றுங் கேடகஞ் சிதைந்தன மற்றும்வெம் படையு

     முற்றும் போயின நின்றன ரவண்விதி முடிய.

237

     (இ-ள்) அவர்கள் அவ்வாறு நெருங்கிய வெவ்விய அம்புகளை எய்து எய்து தூணியும் அம்புக ளில்லாம லாயிற்று. விஜயத்தைக் கொண்ட வாளாயுதத்தை வீசி வீசி அஃதுங் கெட்டுப் போயிற்று. சத்துராதிகளது ஆயுதங்களை விலக்கிப் பிடித்த பரிசையுஞ் சிதைந்தது. மற்றுமுள்ள வெவ்விய ஆயுதங்களும் முழுவது மில்லாமலாயின. ஆதலால் தங்கள் ஊழானது முடியும் வண்ணம் அங்கு நின்றார்கள்.

 

3997. விலகு தற்கரி தெனுஞ்சரம் போயும்போர் வேட்ப

     நிலையி லாச்சமை யந்தனைப் பொருளென நினைந்த

     விலகு திண்கழல் வேந்தர்கள் மூவரு மிரங்கா

     தலகில் வேற்படை யாவையு மேவின ரன்றே.

238

     (இ-ள்) அவ்வாறு நின்ற அவர்கள் விலகுவதற் கரிதென்று சொல்லும் அம்புகள் தங்கள் வசமில்லாமற் போயும் யுத்தத்தை விரும்ப, நிலையில்லாத சமயத்தைப் பொருளென்று கருதிய பிரகாசியா நிற்குந் திண்ணிய வீரத்தண்டையைத் தரித்த காபிர்களான அந்த அரசர்கள் மூன்று பேரும் இரங்காமல் கணக்கற்ற வேல் முதலிய ஆயுதங்க ளெல்லாவற்றையும் அவர்கள் மீது ஏவினார்கள்.

 

3998. கொடிய நஞ்செனத் தீயென வுருமெனக் கொதித்த

     படைக ளியாவும்வந் தடலமு சாவுடற் பாங்கி

     னிடமுண் டில்லெனப் பாய்ந்தன துளைத்தன வெங்கு

     முடைய வன்விதிப் படியலால் வேறென்ப துண்டோ.

239

     (இ-ள்) அவ்வாறு ஏவக் கொடிய விடத்தைப் போலவும், நெருப்பைப் போலவும், இடியைப் போலவும் கொதித்த அந்த ஆயுதங்களனைத்தும் வந்து வலிமையைக் கொண்ட ஹம்சா றலி யல்லாகுஅன்கு அவர்களது சரீரத்தின் பக்கத்தில் இடமானது உள்ளது, இல்லதென்று சொல்லும் வண்ணம் எவ்விடத்திலும் பாய்ந்து துளைத்தன. அஃது யாவற்றையுஞ் சொந்தமா யுடையவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் ஊழின் வண்ணமே யல்லாமல் வேறென்று சொல்லுவ தற்குள்ளதா? இல்லை.