இரண்டாம் பாகம்
மெலிவடையப் பெற்று அலைந்து
திரிந்தாரோ? என்று இத்தன்மையான வார்த்தைகளைச் சொல்லிப் புலம்பிக் கொண்டு பொருக்கென்று
போய் மாண்டு போன அந்தக் ககுபென்பவனைச் சந்தித்தாள்.
4119.
கண்டனள் பதறி வீழ்ந்தன ளாகங்
கலங்கினள் சோர்ந்தன ளறிவு
விண்டன ளுயிர்ப்பு வீங்கினள் பதைத்து
விம்மினள் கதிறினள் வெருவல்
கொண்டன ளியாவு மறந்தனள் வயிற்றிற்
குற்றின ளெற்றினள் பூழ்தி
மண்டினள் புலனு மொடுங்கினள் கண்ணீர்
வடித்தனள் துடித்தனள் மடமான்.
68
(இ-ள்) அவ்வாறு சந்தித்த
இளம் பிராயத்தைக் கொண்ட மான்போலு மருண்ட பார்வையை யுடைய அந்தப் பெண்ணானவள் தனது நாயகனைக்
கண்களினாற் பார்த்தாள். பார்த்தவுடன் மாண்டு கிடக்கின்றா னென்று தெரிந்து நடுக்கமுற்றுப்
பூமியில் விழுந்தாள். மனமானது துயரமுறப் பெற்றாள். உடலம் மெலிந்தாள். தனது அறிவானது பிரியப்
பெற்றாள். நெடுமூச்சு விட்டாள். துடித்து ஏங்கினாள். சத்தமிட்டாள். அச்சத்தை யடைந்தாள்.
எல்லாவற்றையு மறந்தாள். வயிற்றில் கைகளால் குற்றினாள். அடித்தாள். பூமியிலுள்ள புழுதியானது
சரீரத்திலப்பும் வண்ணங் கிடந்தாள். பஞ்சேந்திரியங் களினது உணர்ச்சியு மொடுங்கப் பெற்றாள்.
கண்களி லிருந்து நீரைச் சொரிந்தாள் பதைத்தாள்.
4120.
அய்யகோ தமியே னகத்துறை நிதியே
யாடவர் திலகமே யரசே
வெய்யகோ ளரியே மருவல ரிடியே
வேண்டியான் செய்தபுண் ணியமே
செய்யநன் மாற்ற முரைத்தவை தடுத்தாய்
தீங்குறு மென்பதுந் தெளியா
தெய்தினை வீணி னிறந்தனை தனித்தே
னேழையே னெனப்புலம் பினளால்.
69
(இ-ள்) அவ்வாறு
பதைத்த அவள் ஐயோ! தமியேனாகிய எனது மனதின் கண் தங்கிய பொக்கிஷ மானவரே! புருடர்களுக்குத்
திலதமானவரே! அரசானவரே? கொடிய ஆண்சிங்க மானவரே! சத்துராதிகளாகிய மயில்களுக்கு இடியானவரே!
நான் விரும்பிப்
|