இரண்டாம் பாகம்
4117.
குருதிநீர் துடைத்து வாளுறை புகுத்திக்
கூடிய நால்வருஞ் சூழ
விரைவுட னெழுந்தங் கவர்மனை போந்தார்
வீந்தவன் மனையிடத் துறையும்
சுரிகுழற் பணைத்தோட் பிறைநுதற் கனிவாய்த்
துணைமுலைக் கொடியிடைக் கரிய
வரிவிழிச் சிறுமான் மயிலனா ளுரிய
மன்னவன் வரவினைக் காணாள்.
66
(இ-ள்) அவன் அவ்வாறு
மாள, அந்த முகம்மது றலியல்லாகு அன்கு அவர்கள் இரத்த நீரைச் சுத்திசெய்து வாளாயுதத்தை யுறையினகம்
போட்டுத் தங்களோடு சேர்ந்த சஹாபாக்கள் நான்குபேருந் தங்களை வளையும் வண்ணம் வேகமாயெழும்பி
அவ்விடத்திலுள்ள அவர்களது வீட்டின் கண் போய்ச் சேர்ந்தார்கள். மாண்டவனான அந்தக் ககுபென்பவனது
வீட்டில் தங்கிய முறுக்கைக் கொண்ட கூந்தலையும் மூங்கிலைப் போன்ற தோள்களையும் மூன்றாஞ் சந்திரனை
நிகர்த்த நெற்றியையும், கொவ்வைக் கனியையொத்த வாயையும் இரட்டை முலைகளையுங் கொடிபோலு
மிடையையுங் கருநிறந் தங்கிய சிவந்த இரேகைகள் படர்ந்த கண்களையுமுடைய இளம்பிராயத்தைப் பெற்ற
அவனது மனைவியாகிய மயில்போலுஞ் சாயலையுடையவள் தனது நேசத்தைக் கொண்ட நாயகனது வருகையைக் காணாதவளாக.
4118.
சென்றன ரின்னே வந்திலர் கொடிய
தீவினைப் பயனணு கினவோ
கன்றிய மனத்துள் தீனெனுஞ் செறுநர்
கையுறக் கலங்கிநின் றனரோ
பொன்றிகழ் முலையா ராசையங் கடலுட்
புக்கிமெய் சோர்ந்துழன் ரனரோ
வென்றிவை புலம்பிப் பொருக்கென வேகி
யெஞ்சினன் றனையெதிர்ந் தனளால்.
67
(இ-ள்) நமது நாயகர்
போனார். இன்னமுந் திரும்பி வந்திலர். ஆதலால் அவருக்குப் போன அவ்விடத்தில் வெவ்விய பாதகத்தின்
பயனானது வந்து சேர்ந்ததோ? அல்லது தீனுல் இஸ்லாமென்று சொல்லுஞ் சத்துராதிகளது கையிற்
பொருந்த நைதலுற்ற இதயத்தின் கண் துயரமுற்று நின்றாரோ? பொன்னைப் போலுந் தேமலானது பிரகாசியா
நிற்குந் தனபாரங்களையுடைய மாதர்களது ஆசையாகிய அழகிய சமுத்திரத்தில் மூழ்கி யுடலமானது
|