பக்கம் எண் :

சீறாப்புராணம்

1503


இரண்டாம் பாகம்
 

அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது செந்நிறத்தைக் கொண்ட தாமரை மலரை நிகர்த்த திருவடிகளில் வணங்கி மனதின்கண் வஞ்சகமானது நிறையப் பெற்ற துரோதத்தைக் கொண்ட அந்தக் ககுபென்பவனை இரவில் அவ்வாறு கொலை செய்த தந்திர வார்த்தைகளின் ஒழுங்குகளைச் சொல்ல, அவர்கள் அதைக் கேள்வியுற்று வரா நிற்கும் நமது பெரிய விரோதமானது தொலைந்ததென்று சொல்லி மனதின் கண் களிப்படைந்து அவர்களுக்குப் பல இரத்தினங்களுடன் வத்திரங்களும் மிக்க திரவியமும் பரிசாகக் கொடுத்தார்கள்.