இரண்டாம் பாகம்
(இ-ள்) அவ்வாறு பற்றிய
பற்பல பொருள்களையும் வெவ்விய ஆயுதங்களையும் குதிரைகளையும் விஜயத்தைக் கொண்ட வீரர்களான
அவர்கள் ஆதியிற் கொண்டு வந்துள்ள பலசரக்குகளையும்..
4155.
ஆட்டைக் கொண்டின மம்புவிக்
கூட்டத் தோர்பலர் கூடியப்
பேட்டைக் கேற்றிவிற் பீரெனச்
சூட்டு மோலியர் சொல்லினார்.
16
(இ-ள்) பூணா நிற்குங்
கிரீடத்தை யுடையவர்களான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகி வசல்ல மவர்கள் வருடத்திற் கெட்டு நாள் அழகிய இப்பூமியின் கண்ணுள்ள கூட்டத்தார்களான
அனேகர் ஒன்று சேர்ந்த சந்தையிற் கொண்டு போய் விய்யுங்களென்று கட்டளையிட்டார்கள்.
4156.
கற்ற தீனருங் காபிரு
முற்றுப் பூசல்பார்ப் போமென
மற்றுள் ளோர்களும் வந்ததால்
விற்ற தேதொகை மிஞ்சவே.
17
(இ-ள்) அவ்வாறு கட்டளையிட,
படித்த தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தை யுடையவர்களுங் காபிர்களும் பொருந்திச் செய்கின்ற
யுத்தத்தைப் பார்ப்போ மென்று மற்றுள்ள ஜனங்களும் அங்கே வந்திருந்ததால் தொகையானது அதிகரிக்கும்
வண்ணம் அப்பொருள் களியாவும் விற்றன.
4157.
குதிகொ ளும்பரிக் குப்பமோ
டதிக வீரர்மற் றரசரு
முதிய காரண முகம்மது
மதின மீதினில் வந்தனர்.
18
(இ-ள்) அவ்வாறு
விற்க, பழமையான காரணங்களையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல்
குறைஷிய்யா காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களும் சாட்டத்தைக்
கொண்ட குதிரைக் கூட்டங்களுடன் மிகுத்த வீரர்களான சஹாபாக்களும் மற்ற அரசர்களும் திருமதீனமா
நகரத்தின் கண் வந்து சேர்ந்தார்கள்.
|