இரண்டாம் பாகம்
சாபிறு றலியல்லாகு அன்கு
அவர்களது ஒட்டகமானது முன்னாற் போகத் திருமதீனமா நகரத்தின்கண் போய்ச் சேர்ந்தார்கள்.
4264.
இலகு பல்வள மதீனத்தி னேகவிப் பால்வெங்
கொலையி னின்றன னியற்றிய தீமையைக் குறித்து
மலகில் கீர்த்திசூழ் முகம்மது விடுத்தலு மவனும்
நலிவி லாதுள மகிழ்ந்துதன் றிசையினி னடந்தான்.
87
(இ-ள்) அவர்கள் அவ்வாறு பிரகாசியா நிற்கும் பல செல்வங்களையுடைய
திருமதீனமா நகரத்தின்கண் போய்ச் சேர, பின்னர் வெவ்விய கொலைத் தொழிலில் நின்றவன் செய்த
பொல்லாங்கைச் சிந்தித்துங் கணக்கற்ற புகழானது சூழப்பெற்ற நமது நாயகம் நபிகட் பெருமானார்
நபிகாத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் விட்ட மாத்திரத்தில்,
அக்காபிரும் மெலிவின்றித் தனதிதயமானது களிக்கப்பெற்றுத் தன் திசையை நோக்கிச் சென்றான்.
4265.
இருந்த மாயவெங் குபிரிடை யுழன்றபே ரிழிவும்
பொருந்து தீமையு மாய்விலாப் புன்மையும் போக்கி
மருந்து போன்றநல் வழியினை மனத்தினின் மதித்துத்
திருந்தி நாடொறுங் கேளிர்சூழ் வாழ்பதி சேர்ந்தான்.
88
(இ-ள்) கபடமுறைந்த வெவ்விய
குபிர்மார்க்கத்தின் மத்தியில் தானுலைந்து திரிந்த பெரிய ஈனத்தையும், அதனாற் பொருந்திய
கங்கையும், அதை ஆராய்ந்து பாராத சிறுமையையு மொழித்து அமுதத்தை நிகர்த்த நன்மை பொருந்திய
சன்மார்க்கத்தை இதயத்தின்கண் குறித்துப் பிரதி தினமும் திருத்தமுற்றுத் தனதுறவினர்கள் சூழ்ந்த
தானிருக்கின்ற ஊரின்கண் போய்ச் சேர்ந்தான்.
4266.
உறவின் மிக்கமைந் தரையுறு துணைவரை யுரிய
மறமி குத்திடுங் கேளிர்க டமைவர வழைத்து
முறைமை யாகவோ ரிடத்தினி லுவந்துமுன் னிருத்தி
யறிவு மீறிய வாய்மையீர் கேண்மினென் றறைவான்.
89
(இ-ள்) அவ்வாறு சேர்ந்து
உறவினால் மேன்மைப்பட்ட தனது புதல்வர்களையும் பொருந்திய சகோதர்களையும் தனக்குரிமையான வீர
மதிகரித்த உறவினர்களையும் விரும்பிக் கூப்பிட்டு ஒழுங்காக ஓர் தானத்தில் முன்னா லிருக்கச்
செய்து புத்தியானது மிகுக்கப் பெற்ற சத்தியத்தை யுடையவர்களே! யான் கூறுவதைக் கேட்பீர்களாகவென்று
சொல்லுவான்.
|