பக்கம் எண் :

சீறாப்புராணம்

1552


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு விழ, அந்த முகம்ம தென்பவர் அந்த வாளையுந் தெய்வீகந் தங்கிய செழிய தமது கையினிடத்துக் கொண்டு என்னை நெருக்க, அதனால் யான் சுழன்று மயங்கி மனமானது கலங்கப் பெற்று இப்பூமியின் கண் எனது குற்றத்தை யொழித்து என்னைக் காப்பாற்றுவீர்களாக வென்று வாயைத் திறந்து சொன்னேன். மேன்மையை யுடையவரான அவர் அக்குற்றங்களை மன்னித்து என்னை அங்கிருக்கும்படி செய்தார்.

 

4271. மருங்கி ருந்ததீன் மன்னவ ரனைவரும் வலிதி

     னெருங்கி வந்துருத் தார்த்தெனை வீழ்த்தமு னேர்ந்தார்

     தருங்கை வள்ளலா ரங்கவர் கதத்தினைத் தவிர்த்தே

     யொருங்கு போவென விடுத்திட மீண்டிவ ணுறைந்தேன்.

94

     (இ-ள்) அவ்வாறு செய்யப் பக்கத்திலிருந்த தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தை யுடைய அரசர்களான அசுஹாபிமார்க ளியாவரும் வலிமையோடும் என்னை யடுத்து வந்து வற்புறுத்திக் கோபித்து வெட்டிப் பூமியின்கண் விழுத்தும் வண்ணம் முன்னால் வந்தார்கள். ஈகையைத் தருகின்ற கைகளையுடைய வள்ளலாரான அந்த முகம்மதென்பவர் அங்கே அந்த அசுஹாபிமார்களது கோபத்தை யொழித்து என்னை ஒழுங்காகச் செல்லென்று அனுப்பத் திரும்பி இங்கு வந்து தங்கினேன்.

 

4272. எண்ணு தற்கரும் பெரும்பிழை யியற்றியு மிரங்கித்

     தண்ணென் வாய்மொழி கொடுத்தளித் தடைக்கலந் தந்தார்

     புண்ணி யத்தின்மே னின்றவர்க் கல்லதிப் பொறுமை

     யொண்ணு மோமற்றி யாவர்க்கு முததிசூ ழுலகில்.

95

     (இ-ள்) சமுத்திரஞ் சூழ்ந்த இப்பூமியின் கண் நினைத்தற் கருமையான பெரிய குற்றத்தை யான் செய்தும் இரக்கமுற்று வாயாற் குளிர்ச்சி பொருந்திய வார்த்தைகளைச் சொல்லிக் காத்து எனக்கு அபயங் கொடுத்தார். இந்தப் பொறுமையானது தருமநெறியில் நின்றவர்களுக் கல்லாமல் மற்ற அனைவருக்கும் பொருந்துமா? பொருந்தாது.

 

4273. வெருவு றுமனத் துன்பமும் விளைவுறு பயமு

     மருளுந் தீங்கிலா மயக்கமு மாற்றியன் னோர்தம்

     பெரிய வனரு ளாலென துயிர்தந்த பெற்றி

     யருளி னுக்கெதி ருதவிநம் மாற்செய்ய லாமோ.

96

     (இ-ள்) ஆதலால் அச்சமானது பொருந்தா நிற்கும் இதயத்தினிடத்துள்ள வருத்தத்தையும் அவ்விதயத்தின்கண்