பக்கம் எண் :

சீறாப்புராணம்

1560


இரண்டாம் பாகம்
 

அங்குப் போய் ஓங்காநிற்குந் தங்களது கடன்றொகையை அளந்துகொண்டு போனார்கள்.

 

4293. விதம்பெறுங் குவையின் மற்றோர் குவையினின் வேண்டு நூற்றைம்

     பதின்கலப் பழமுங் காபிர் பண்புட னளந்தும் நீடற்

     புதந்தரக் கனிக ளொன்றுங் குறைந்தில பொருவி லாதீன்

     மதந்தரு நபிகள் கோமான் மகிமையார் வகுக்க வல்லார்.

9

     (இ-ள்) இனத்தைப் பெற்ற அந்தக் குவியல்களில் ஒரு குவியலில் அந்தக் காபிர்கள் தகுதியுடன் அவ்வாறு தங்களுக்கு வேண்டிய நூற்றைம்பது கலப்பழத்தையு மளந்தும் நீண்ட ஆச்சரியத்தைக் கொடுக்கும் வண்ணம் அந்தப் பழங்க ளொன்றுங் குறைந்திலது. ஆதலால் ஒப்பற்ற தீனுல் இஸ்லா மென்னும் மெய்ச் சமயத்தைத் தந்த நபிகட் பெருமானாரான நமது நாயகம் நபிசெய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது பெருமையை வகுத்துச் சொல்லும் வல்லவர்கள் யாவர்? ஒருவருமில்லர்.

 

4294. தருத்தொறுங் குவித்து நின்ற பலகுவை யனைத்துஞ் சாபிர்

     கருத்தினிற் களிப்பு மீறி மகிழ்ந்துகைக் கொண்டு போற்றிச்

     சிரத்தினை யடியின் வீழ்த்திச் சென்றுதம் மனையிற் புக்கார்

     வரத்தின்மே னின்ற வேத வள்ளலு மனையிற் போந்தார்.

10

     (இ-ள்) அந்த ஈத்தஞ் சோலையிலிருந்த மரங்களி னடியிலெல்லாங் குவித்து வைத்த பல குவைகளாகிய எல்லாவற்றையும் அந்தச் சாபிறு றலியல்லாகு அன்கு அவர்கள் தங்கள் சிந்தையின்கண் மகிழ்ச்சியான ததிகரிக்கப் பெற்று மகிழ்ந்து கைக்கொண்டு அந்நாயகமவர்களைத் துதித்துத் தங்கள் தலையை அவர்களது பாதத்தின் மீது விழுத்திப் பணிந்து தங்களது வீட்டின்கண் போய்ச் சேர்ந்தார்கள். வரத்தின் மீது நிற்கப் பெற்ற புறக்கானுல் மஜீதென்னும் வேதத்தை யுடைய வள்ளலான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் அஹமது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுந் தங்கள் மாளிகையின்கண் போய்ச் சேர்ந்தார்கள்.