இரண்டாம்
பாகம்
ஆகாயத்தின் கண் தாவுகின்ற
குதிரையின் மேலேறிப் பக்கத்தில் நின்றார்கள்.
4494. சேனை
யின்னடு நிற்பச் சிறந்திலா
வீன வெங்குபி ரென்பவ
ரெண்ணிலா
மான வேன்மழுச் சக்கரம்
வாளுட
னூனு டைச்சர முள்ளவை
யேவினார்.
56
(இ-ள்)
அவர்கள் அவ்வாறு சைனியங்களின் மத்தியில் நிற்க,
சிறக்காத கீழ்மைத்தனத்தையுடைய வெவ்விய
காபிரென்பவர்கள் கணக்கற்ற பெருமை பொருந்திய வேல்,
மழு, சக்கரம், வாளோடு நிணத்தையுடைய அம்புகளாகிய
தங்கள் வசமிருந்த இவைகளை அவர்கள் மீது விடுத்தார்கள்.
4495. விடுத்த
பல்படை யின்னொரு வெஞ்சர
மடுத்து வந்திவ ணின்றவ
ரங்கையின்
மடுத்து ளோடி வெளியினில்
வாங்கின
தொடுத்த தாரையிற்
சோணிதந் துள்ளின.
57
(இ-ள்)
அவ்வாறு விட்ட பல ஆயுதங்களில் வெவ்விய ஒரு அம்பானது
நெருங்கி வந்து இங்கு நின்றவர்களான அந்தச் சகுது
றலியல்லாகு அன்கு அவர்களது உள்ளங்கையினுட் கொண்டு
உள்ளாக ஓடி அப்புறத்திற் சென்றது. அது தொடுத்த வழியில்
இரத்தமானது குதித்தது.
4496. ஸாது
வேந்தர் கரத்திற் சரம்பட
வாதி யேவ லியைந்த
வலிப்புலி
வூதை பிற்பட வுன்னிய
வுன்னியை
வீதி விட்டமர்
மேவுளர்த் தாக்கினார்.
58
(இ-ள்)
அவ்வாறு அரசராகிய சகுது றலியல்லாகு அன்கு அவர்களது
கையில் அம்பானதுபட, யாவற்றிற்கு முதன்மையனான அல்லாகு
சுபுகானகுவத்த ஆலாவின் ஏவலிற் பொருந்திய புலியாகிய
அலியிபுனு அபீத்தாலிபு றலியல்லாகு அன்கு அவர்கள்
காற்றினது வேகமும் பிற்படும் வண்ணம் உன்னிய குதிரையை
வையாளிவிட்டு அந்த யுத்தக்களத்தில் நின்ற
சத்துராதிகளான காபிர்களைத் தாக்கினார்கள்.
4497. கனைக்கும்
வானத் திடியெனக் காபிர்மேன்
முனைக்கு மாங்கவர்
சோரியின் முற்றுமே
நனைக்கு நேமியை
நாற்றிசை யெங்கும்போய்
நினைக்கு முன்னம்
வருமுன்னர் நிற்குமால்.
59
(இ-ள்) அவர்கள் அவ்வாறு தாக்க, அவர்கள்
ஏறிய குதிரையானது ஆகாயத்தின் கண் ணுண்டாகா நிற்கும்
இடியைப்
|