இரண்டாம்
பாகம்
சிந்தின. ஊனாற்
பொதியப்பட்ட இரத்தப் பெருக்கின் நீரானது மேகத்தால்
பொழியப்பட்ட மழையைப் போலும் பிரகாசித்தன.
4490. செயிர்து
றந்த திறத்தினர் திண்படைக்
கையில்வி டுப்ப
விரைந்தெழு கந்துக
முயிர்து றந்து கிடந்தவுண்
மூளையாந்
தயிர்சொ ரிந்து
கிடந்தவ தின்றலை.
52
(இ-ள்)
அன்றியும், குற்றத்தை யொழித்த வீரர்கள் திண்ணிய
ஆயுதங்களைக் கையினால் விடுக்க, அதனால் வேகமா
யெழாநிற்குங் குதிரைகள் தங்களாவியை யொழித்துக்
கிடந்தன. அக்குதிரைகளின் சிரமானது அகத்திலுள்ள
மூளையாகிய தயிரைச் சிந்திக்கிடந்தன.
4491. கண்டெ
ரிந்தில சேந்த கடுஞ்சரம்
புண்டெ ரிந்தில
போர்த்த வயவருக்
கெண்டெ ரிந்தில பட்ட
விவுளிகள்
விண்டெ ரிந்தில மேவிய
புள்ளரோ.
53
(இ-ள்)
அன்றியும், செந்நிறத்தைக் கொண்ட கொடிய அம்புகளால்
கண்கள் தெரிந்திலன. வீரர்களுக்குத் தங்கள் சரீரத்தை
மூடிய காயங்கள் தெரிந்திலன. அங்கு மடிந்த குதிரைகளின்
கணக்கானது இத்தனையென்று தெரிந்திலது. பொருந்திய
பட்சிகளினால் ஆகாயமானது தெரிந்திலது.
4492. தரங்கி
டந்த நெடுஞ்சரந் தாக்கியுள்
ளுரங்கி டந்துயி
ருண்டெழுந் தோடலு
மரங்கி டந்துணும் வாளி
னறுத்தலு
மரங்கி டந்தென
வீழ்ந்தனர் மள்ளரால்.
54
(இ-ள்)
அன்றியும், வலிமையானது கிடக்கப் பெற்ற நெடிய அம்புகள்
மார்பினுள் மோதி அங்குக் கிடந்த ஆவியையருந்தி
யெழும்பி யோடுதலாலும், அரமானது கிடந்து உண்ணுகின்ற
வாளாயுதத்தினால் வெட்டுதலாலும், வீரர்கள் மரங்கள்
கிடந்தாற் போலும் வீழ்ந்தார்கள்.
4493. இருதி
றற்படை யின்னன போர்செய
விருது கட்டிய சஃதெனும்
வேந்தர்போய்
மருவு மள்ளரை
வீழ்த்திவிண் வாவிய
பரியின் மேற்கொண்டு
நின்றனர் பாலினே.
55
(இ-ள்) வலிமையையுடைய இரண்டு சைனியங்களும்
இத்தன்மையாக யுத்தஞ் செய்ய, விருதை வீக்கப் பெற்ற
சகுது றலியல்லாகு அன்குவென்று சொல்லும் அரசரானவர்கள்
சென்று பொருந்திய வீரர்களைக் கொன்று பூமியின் கண்
விழச் செய்து
|