பக்கம் எண் :

சீறாப்புராணம்

1636


இரண்டாம் பாகம்
 

4486. அபுது வத்தருள் மைந்தன டங்கிலாப்

     பவமு டற்றமு றும்வரிப் பாய்புலி

     சிவணு மிக்கிரி மாவுஞ் செலும்வழி

     கவியக் கட்டினர் நின்றனர் காணவால்.

48

      (இ-ள்) அவ்வாறு வந்த பாதையை அபுதுவத்தென்பவன் இவ்வுலகத்தில் தந்த புத்திரனாகிய அமையாத பாவத்தால் துரத்துண்ட அமுறென்பவனும், பாயா நிற்கும் இரேகைகளையுடைய புலியை நிகர்த்த இக்கிரிமாவென்பவனும் வளையும் வண்ணங் கட்டி அவர்கள் பார்க்கும்படியாக நின்றார்கள்.

 

4487. மாதி ரப்புய மன்னலி யுந்திறற்

     சாது வேந்தருந் தாரையி னீண்டலும்

     பேதி யாது மனத்திற் பிரியமுற்

     றேதி லாத விருவருந் தாக்கினார்.

49

     (இ-ள்) அவ்வாறு நிற்க, மலையைப் போன்ற தோள்களையுடைய வேந்தரான அலியிபுனு அபீத்தாலிபு றலியல்லாகு அன்கு அவர்களும் வல்லமையையுடைய அரசராகிய சகுது றலியல்லாகு அன்கு அவர்களும் பாதையின் கண் வந்து நெருங்கின மாத்திரத்தில், குற்றமற்ற அவர்களிருவரும் இதயத்தின் கண் வேற்றுமைப்படாது விருப்பமுற்று எதிர்த்தார்கள்.

 

4488. கடலி ரண்டு கலந்தெனக் காதிய

     படையி ரண்டு மெதிர்ந்தன பாய்பரி

     யுடலி ரண்டு கிடந்த வுகுதலை

     யிடமி ரண்டு மலிந்த விமைப்பினே.

50

     (இ-ள்) அவ்வாறு காதிய இருசேனைகளும் இரு சமுத்திரமானது ஒன்றோடொன்று கலந்ததைப் போலு மெதிர்த்தன. அவ்விதமெதிர்க்கவும் கண்ணை மூடி விழிப்பதற்குள் இருபக்கத்திலும் பாயா நிற்குங் குதிரைகளின் சரீரமானது இரண்டு துண்டங்களாகக் கிடந்தன. சிந்திய அவற்றின் சிரங்களானவை அதிகரித்தன.

 

4489. தேன்பொ ழிந்த தொடைமுடித் தீதிலா

     மீன்பொ ழிந்தென வெண்முத் துகுத்தன

     வூன்பொ திந்த வுதிரப் பெருக்கினீர்

     வான்பொ ழிந்த மழையெனக் கான்றன.

51

     (இ-ள்) அன்றியும், அரசர்கள் அணிந்திருந்த மதுவைச் சிந்துகின்ற மாலையைத் தரித்த கிரீடங்கள் களங்கமற்ற நட்சத்திரங்களைச் சிந்தினாற்போலும் வெள்ளிய முத்தங்களைச்