பக்கம் எண் :

சீறாப்புராணம்

1635


இரண்டாம் பாகம்
 

4482. இனைய போர்செய் திகலு மளவையிற்

     சினமுண் மீறி யபூசகல் தேடிய

     தனைய னும்அமு றுஞ்சில தானையி

     னனிய கன்ற வகழினை நண்ணினார்.

44

     (இ-ள்) இத்தன்மையாக எதிர்த்து யுத்தஞ் செய்கின்ற சமயத்தில் அபூஜகிலென்பவன் சம்பாதித்த புத்திரனான இக்கிரிமாவென்பவனும், அமுறென்பவனும் கோபமானது மனதின்கண் அதிகரிக்கப் பெற்றுச் சில சைனியங்களோடும் மிகவும் விசாலமாகிய அகழியை வந்து நெருங்கினார்கள்.

 

4483. பாரைப் பற்றிப் படுகுழி போலக

     னூரைச் சுற்றி யெடுத்திங் குறைந்தனர்

     காரைப் பற்றுங் கவிகையன் காட்டுதீன்

     வேரைப் பற்றி யெழுந்தவவ் வீரரே.

45

     (இ-ள்) அவ்வாறு நெருங்கி, மேகத்தாற் பிடிக்கப்படுங் குடையை யுடையவனான அந்த முகம்மதென்பவன் காட்டிய தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தினது வேரைப் பிடித்து எழும்பினவர்களாகிய அந்த வீரர்கள் இங்கே பூமியைப் பற்றிப் படுகிடங்கு போல விசாலமாகிய இந்தத் திருமதீனமா நகரத்தை வளைந்து எடுத்து தங்கினார்கள்.

 

4484. முன்னி லாதக வுத்துவ முற்றுற

     வின்ன நாளிலி யற்றின ரீங்கிதாற்

     பன்னு மாயமே தோவெனப் பாவியோ

     ருன்னி மீண்டோ ரிடத்தினி லுற்றனர்.

46

      (இ-ள்) ஆதியிலில்லாத வஞ்சகமானது முழுதும் பொருந்து வண்ணம் இக்காலத்தில் இங்கே இதைச் செய்தார்கள். ஆதலால் சொல்லா நிற்கும் மாயமானது யாது? என்று பாவிகளாகிய அவர்கள் கருதித்திரும்பி ஓர் தானத்தின் கண் போய்த் தங்கினார்கள்.

 

4485. கிடங்க டுத்தணி நிற்பது கேடென

     வொடுங்கி யப்புற மெய்தலு மூக்கமூர்

     மடங்க லென்னும் அலிவளர் மாமறந்

     தொடங்கி மீளியர் சூழ்தரத் தோன்றினார்.

47

     (இ-ள்) அவர்கள் அவ்வாறு அந்த அகழை நெருங்கி அதற்குச் சமீபமாக நிற்பது கேடென்று ஒதுங்கி அப்பால் போய்ச் சேர்தலும், வலிமையானது பரவப் பெற்ற சிங்கமென்று சொல்லும் அலியிபுனு அபீத்தாலிபு றலியல்லாகு அன்கு அவர்கள் ஓங்கா நிற்கும் பெரிய வன்மத்தைப் பூண்டு வீரர்கள் தங்களை வளைந்து வரும் வண்ணம் அங்கே வந்தார்கள்.