பக்கம் எண் :

சீறாப்புராணம்

1689


இரண்டாம் பாகம்
 

4655. அஞ்ச வாடவ ரைக்கொலை செய்தவர்

     வஞ்சி மாரை மதலையர் தம்மொடுஞ்

     செஞ்ச வூழியஞ் செய்வித் தவர்பொரு

     ளெஞ்சு மாதுலர்க் கீந்திடல் வேண்டுமே.

34

     (இ-ள்) ஆதலாற் புருடர்களைப் பயப்படும்படி கொலை செய்து அவர்களது பெண்களைப் புத்திரர்களோடும் சேரும் வண்ணந் தொண்டு செய்வித்து அவர்களது திரவியங்களை எஞ்சிய தரித்திரர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

 

4656. செய்யுங் காரிய மீதன்றி யேசெலும்

     வைய மீதில் வழக்கொன்று மில்லெனத்

     துய்ய சஃது சொலநபி யிவ்வுரைக்

     கைய மில்லையல் லாவரு ளீதென்றார்.

35

      (இ-ள்) செய்கின்ற கருமமானது இஃதல்லாமல் இப் பூமியின் கண் வேறு செல்லுகின்ற விவகார மானது ஒன்றுமில்லை யென்று பரிசுத்தத்தையுடைய அந்தச் சகுது றலியல்லாகு அன்கு அவர்கள் சொல்ல, நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் இந்த வார்த்தைக்குச் சந்தேகமில்லை. இஃது அல்லா ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் கிருபை யென்று சொன்னார்கள்.

 

4657. ஏர்கு லாஅஸ் காபிக ணோக்கியே

     வார மற்ற பனீகுறை லாவையிந்

     நேர மேகொடு வாருமி னீரெனச்

     சீர்கு லாவு திருநபி செப்பினார்.

36

     (இ-ள்) அவ்வாறு சொல்லிச் சிறப்பானது குலாவா நிற்குந் தெய்வீகந் தங்கிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அழகு பிரகாசிக்கின்ற அசுஹாபிமார்களைப் பார்த்து நீங்கள் அன்பற்ற பனீக் குறைலா வென்பவர்களை இப்பொழுதே பிடித்துக் கொண்டு வாருங்களென்று கட்டளை செய்தார்கள்.

 

4658. ஓது நன்மொழி யுட்கொண்டஸ் காபிகள்

     வாது செய்யும் பனீகுறை லாநகர்ப்

     பேதை யாடவர் பிள்ளைக டம்முட

     னேத முற்ற பொருளுங்கொண் டீண்டினார்.

37

      (இ-ள்) அவ்வாறு சொல்லிய நன்மை பொருந்திய அந்த வார்த்தைகளை அசுஹாபிமார்கள் மனதின் கண் கொண்டு வாது