பக்கம் எண் :

சீறாப்புராணம்

170


முதற்பாகம்
 

இலாஞ்சனை தரித்த படலம்

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

391. புரிசைசூழ் மக்கந் தன்னிற் போந்தவ ணிருந்தும் பின்னர்த்

   திருவுறை குனையி னென்னும் பதியினிற் சேர்ந்தும் பாரிற்

   குரிசின்மா முகம்ம தென்னுங் குலமணி தனக்கு நாளின்

   வருடமூன் றென்னத் தேகம் வளர்ந்தது மிரட்டி தானே.

1

     (இ-ள்) மதிளானது வளையப் பெற்ற மக்கமா நகரத்திற்குச் சென்று அவ்விடத்தில் எட்டு மாதகாலம் தாமதித்திருந்தும், பின்னர் செல்வந்தங்கிய குனையினென்று சொல்லும் பதியினை யடைந்திருந்தும் இவ்வுலகத்தின்கண் பெருமையிற் சிறந்தோர்களான மகத்தாகிய நபிமுஹம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமென்னும் குலவிரத்தினமானவர்களுக்கு நாள்களையுடைய வயசானவை மூன்றென்று சொல்லும்படி தேகமும் அதற்கு இரண்டு பங்காய் வளர்ந்தது.

 

392. ஆண்டுமூன் றுறைந்து நாலா மாண்டுசென் றதற்பின் செல்வம்

    பூண்டமா மயிலே யன்ன பொலன்கொடி யலிமா வென்னுந்

    தூண்டிடா விளக்கின் செவ்விச் சுடர்மதி முகத்தை நோக்கிக்

    காண்டகாப் புதுமை வண்மை முகம்மது கவல லுற்றார்.

2

     (இ-ள்) அவ்வண்ணம் மூன்று வயசு தங்கி நான்காவது வயசு கழிந்ததன் பின்னர்க் காணுதற்கரிய அதிசயங்களையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் செல்வத்தை யணிந்த மயில் போலும் பொன்னாலியன்ற கொடியாகிய ஹலிமாவென்று சொல்லும் தூண்டப்படாத தீபமானவர்களின் அழகிய பிரகாசம் பொருந்திய சந்திரன் போன்ற முகத்தைப் பார்த்து சொல்ல ஆரம்பித்தார்கள்.

 

393. சேட்டிளஞ் சிங்க மென்னுந் திறலுறை யப்துல் லாவும்

    பூட்டிய தனுவால் வெற்றிப் பொருந்துகை லமுறத் தென்னுந்

    தோட்டுணை தனைய ரெங்கே சொல்லுக வனையே யென்னக்

    கேட்டபின் னலிமா வென்னுங் கேகய மறுத்துக் கூறும்.

3