முதற்பாகம்
கண்ணினு மிருக்கு
முகம்மது நபியைக்
கடிதினில் வாகனத் தேற்றி
நண்ணிய குனையின் வழியினைக் கடந்து
நடந்துதம் மனையினைச் சார்ந்தார்.
100
(இ-ள்)
அவ்விதம் சொல்லிக் காட்டிய இருவர்களும்
நினைத்தற்கரிய மாட்சிமை தங்கிய கீர்த்தியை யுடைய
ஹூசைன் நயினாரவர்கள் எடுத்து இயற்றிய வரிசையான
பலவித தருமத்தினது பொருளாய் வரும் இந்நூலுக்குக் கொடை
நாயகராகிய அபுல்காசீ மரைக்காயரவர்களது புத்தியின்
மத்தியி லுறும்படி பொருந்திக் கண்களிலுமிராநிற்கும்
நபி முஹம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களை விரைவாக வாகனத்தின் மீதேற்றி நெருங்கிய
குனையின் பட்டணத்தினது நெறிகளைத் தாண்டி நடந்து
ஊரையடைந்துத் தங்களது வீட்டின்கண் போய்ச்
சேர்ந்தார்கள்.
|