இரண்டாம்
பாகம்
உமுறாவுக்குப் போன படலம்
கலிவிருத்தம்
4799. இச்சை
யாயவ ரின்புற வாழ்ந்தனர்
நச்ச ராவை நலிந்து
தடிந்தெதிர்
மச்ச நல்லுரை கூற
மகிழ்ந்துமா
னச்சந் தீர்த்தவ
ராண்டுறை நாளினில்.
1
(இ-ள்) அந்தக் கவுலத்து றலியல்லாகு அன்ஹா
அவர்களும் அவர்களது புருடரும் விருப்பமாய்
மகிழ்ச்சியானது அதிகரிக்கும் வண்ணம் வாழ்ந்து
வந்தார்கள். விடத்தைக் கொண்ட சர்ப்பத்தை
மெலித்துக் கொன்று தங்கள் முன்பாக மீனானது நல்ல
வார்த்தைகளைப் பேச, அதனாற் சந்தோஷித்து மானினது
பயத்தை இல்லாமற் செய்தவர்களான நமது நாயகம்
எம்மறைக்குந் தாயகம், நபிகட் பெருமானார் நபி
செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன்
காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகி வசல்ல மவர்கள் அந்தத் திரு மதீனமா
நகரத்தின்கண் ணிருக்கின்ற காலத்தில்.
4800. ஆத
ரத்தி லுவந்தசு காபிகள்
மாத வத்தொடு சூழ்வர
மக்கத்தி
லோது கச்சுமு றாச்செய்ய
வுன்னியே
போதுந் தன்மை புகலலுற்
றாமரோ.
2
(இ-ள்) அசுஹாபிமார்கள் அன்பினால்
விரும்பிப் பெரிய தவத்தோடுஞ் சூழ்ந்து வரும் வண்ணம்
திரு மக்கமா நகரத்தின் கண் புகழா நிற்கும் ஹஜ்ஜூ
உமுறாச் செய்யும்படி நினைத்துப் போகின்ற தன்மையை
யாம் சொல்ல ஆரம்பித்தோம்.
4801. அருளு
மேவல்செய் வோரசு காபியை
வருதி சென்று வலிமிகு
மியார்களைச்
செருகு வெஞ்சினச்
சேனையைக் கூயிவண்
டருக வென்று முகம்மது
சாற்றினார்.
3
(இ-ள்) நமது நாயகம் நபிகட் பெருமானார்
நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல்
அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல்
சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தாங்கள் கட்டளை
செய்யும் ஏவலைச் செய்வோரான ஓரசுஹாபியை நீவிர்
வருவீராக, வலிமையதிகரித்த அபூபக்கர்
|