பக்கம் எண் :

சீறாப்புராணம்

1745


இரண்டாம் பாகம்
 

4798. ஆசிலாக் கற்பின் மிக்க வரிவையிப் பழத்தை வாங்கித்

     தேசயா சகருக் கீந்து செழுமனை யிடத்தி லுன்ற

     னேசநா யகனைக் கூட்டிச் செல்லென நிகழ்த்த யார்க்கு

     மாசைகள் கொடுப்பார் போல வழங்கித்தம் மனையிற் புக்கார்.

18

      (இ-ள்) களங்கமற்ற கற்பினால் மேன்மைப்பட்ட அரிவையாகிய கவுலத்தே! நீ இந்தப் பழத்தை வாங்கித் தேசயாசகர்களுக்குக் கொடுத்து உனது நேசத்தையுடைய புருடரைச் செழிய உனது வீட்டின் கண் கூட்டிக் கொண்டு போவாயாக வென்று சொல்ல, அவர்களும் அனைவர்களுக்கும் பொன்களைக் கொடுப்பவர்களைப் போலக் கொடுத்து தங்களது வீட்டின் கண் போனார்கள்.