பக்கம் எண் :

சீறாப்புராணம்

1744


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவர்களுக்கு ஆள் ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு படியளவுள்ள தவசத்தையுங் கொடுத்து விலக்குவது கடமையென்று வேதவசனம் வந்ததென்று சொன்னார்கள். உடனே வருத்தமடைந்து அழுது கொண்டு நின்ற அந்தக் கவுலத்து றலியல்லாகு அன்ஹா அவர்கள் தங்களது வாட்டங்ககளனைத்தையுஞ் சொல்லும்படி இதயத்தின் கண் நினைத்து வள்ளலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது பரிசுத்தத்தைக் கொண்ட வதனத்தை நோக்கிச் சொல்லுவார்கள்.

 

4796. ஆளடி மையர்கொண் டேவ வருநிதி சிறிது மில்லைச்

     சூழுடன் விரதஞ் செய்யத் துன்புறு கிழவ னெந்த

     நாளினு மிரப்போர் கையிற் றவசமே நல்க வேண்டில்

     வாளொளி பரந்த மெய்யாய் வகைபிறி தில்லை யென்றாள்.

16

      (இ-ள்) ஒள்ளிய ஒளிவானது பரவிய சரீரத்தையுடைய நபிகட் பெருமானே! யாங்கள்! ஆளாகிய அடிமைகளைக் கொண்டு ஏவுவதற்கு எங்களிடத்தில் அரிய பொருளானது கொஞ்சமுமில்லை. சத்தியத்தோடும் நோன்பிருப்பதற்கு இவர் வருத்தத்தைப் பொருந்திய விருத்தாப்பியர். எக்காலமும் இரக்கப்பட்டவர்களது கையில் தவசத்தைக் கொடுக்க வேண்டுமானால் வேறு யாதொருவகையு மில்லையென்று சொன்னார்கள்.

 

4797. குறையவ ளிரந்து கூற நபியருள் கூர்ந்து நாமோர்

     பறைநிறை நின்ற வீத்தம் பழமுனக் கீது மென்றார்

     மறைபுகு மென்னைக் காக்க மகிழ்ந்துநீர் கொடுக்கி லென்பாற்

     சிறிதுள பழமென் றன்னாள் செப்பிட வவருஞ் சொல்வார்.

17

      (இ-ள்) அவ்வாறு அந்தக் கவுலத்து றலியல்லாகு அன்ஹா அவர்கள் தங்களது குறைகளை யிரந்து சொல்ல, நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அன்பதிகரித்து நாம் உனக்கு ஒரு பறையளவாக நின்ற ஈத்தம்பழத்தைத் தருகின்றோமென்று சொன்னார்கள். அதற்கு அவர்கள் அடைக்கலம் புகுந்த என்னை நீங்கள் காக்கும் வண்ணஞ் சந்தோஷித்து அப்பழத்தைக் கொடுத்தால் என்னிடத்திலுங் கொஞ்சம் பழ மிருக்கின்றதென்று சொல்ல, அந்நபிகட் பெருமானவர்களுஞ் சொல்லுவார்கள்.