இரண்டாம்
பாகம்
(இ-ள்)
அவன் அவ்வாறு சொல்ல, அஹ்மதென்னுந் திருநாமத்தையுடைய
நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா
செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல்
அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களும் ஆமென்று சொல்லிச் சந்தோஷமாகிக்
கிருபையோடும் அலியிபுனு அபீத்தாலிபு றலியல்லாகு அன்கு
அவர்களைக் கூப்பிட்டு எழுதுவீர்களாகவென்று
சொன்னார்கள். அப்பொழுது இராசமுறைமை பிசகாத
நியாயமானது குலவப்பெற்ற அந்த அலிறலி யல்லாகு அன்கு
அவர்கள் இன்பத்தைத் தருகின்ற நல்ல கீர்த்தியையுடைய
நபிகட் பெருமானே? சீட்டில் எழுதுகின்ற வருணனையானது யாது?
என்று கேட்டார்கள்.
4877. இன்புறும்
பிசுமில் லாகிற் றகுமா னிற்ற கீமென்
றன்புறு முதலிற் கோட்டென் றகுமது வந்து கூற
முன்புறு சுகைலென் போனு மொழிகுவன் பிசுமில் லாவின்
றன்பெயர் நடக்கும் வண்ண மறிகுவந் தரணி மீதில்.
79
(இ-ள்) அவ்வாறு கேட்க, அஹ்மதென்னுந்
திருநாமத்தையுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி
செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன்
காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் மகிழ்ந்து முதலில் அன்பு
பொருந்திய இன்பத்தைத் தருகின்ற பிஸ்மில்லா
ஹிர்றஹ்மா னிற்றஹீமென்று எழுதுங்களென்று சொல்ல,
அவர்களது முன்னால் தங்கிய அந்தச் சுகையிலென்று
சொல்லப்பட்டவனும் சொல்லுவான். யாங்கள் இப்பூமியின்
கண் பிஸ்மில்லாவினது நாமம் நடைபெறும்படி அறிவோம்.
4878. அற்றகுமா
னிற்றகீ மென்ன வறைகின்ற வார்த்தை யாங்க
டிறனுறக் கேட்ட தில்லை யம்மொழி தீட்ட வேண்டா
நிறைபுக ழுடையீ ரென்று சுகைலினி தியம்பக் கேட்டு
மறைபயி லிறசூ லுல்லா மகிழ்ந்தொரு வசனஞ் சொல்வார்.
80
(இ-ள்) நிறைந்த கீர்த்தியையுடைய
நபிகட் பெருமானே! யாங்கள் அர்றஹ்மா னிர்றஹீமென்று
சொல்லுகின்ற வார்த்தையை வலிமையுறும்படி இதற்குமுன்
கேட்டதில்லை. ஆதலால் அந்த வார்த்தையை எழுத
வேண்டாமென்று அந்தச் சுகையிலென்போன் இனிமையோடுஞ்
சொல்ல, புறுக்கானுல், மஜீதென்னும் வேதமானது கூறுகின்ற
அல்லாஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் றசூலான நமது நாயகம்
நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா
|