பக்கம் எண் :

சீறாப்புராணம்

1772


இரண்டாம் பாகம்
 

செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் கேள்வியுற்றுச் சந்தோஷித்து ஒரு வார்த்தை சொல்லுவார்கள்.

 

4879. சொல்லிய விறையா மல்லா தூதரா முகம்ம தென்றுங்

     கல்விசீ ருடைய வள்ளல் கவுல்கொடுத் திட்ட வாறென்

     றொல்லையி லெழுது மென்ன வுரைத்தனர் சுகயி லுள்ள

     மெல்லவே பொருந்தி டாமல் விரைந்தொரு வசனஞ் சொல்வான்.

81

      (இ-ள்) யாவருங் கூறுகின்ற அல்லாவே கடவுளாகும், முகம்மதே றசூலாகுமெனவும், கல்வியையும் சிறப்பையுமுடைய அந்த வள்ளலான முகம்மதென்பவர் கவுல்கொடுத்தவாறெனவும் விரைவில் எழுதுங்களென்று சொன்னார்கள். அதற்கு அந்தச் சுகையிலென்பவன் தனது மனமானது பொருந்தாமல் வேகமாய் மெல்ல ஒரு வார்த்தையைச் சொல்லுவான்.

 

4880. ஆதிதன் றூத ரென்ன வும்மையா மறிந்தோ மாகில்

     வேதனைப் படுவ துண்டோ பகைசில விளைவ துண்டோ

     காதலா லவையும் வேண்டா மெனவவன் கழற அக்கன்

     றூதரு மறுத்தோர் மாற்றுஞ் சொலநினைந் துறுதி யெண்ணி.

82

      (இ-ள்) யாங்கள் உங்களை யாவற்றிற்கு முதன்மையனான அல்லா ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் றசூலென்று தெரிந்தோமானால் யாங்கள் துன்பப்படுவதுண்டா? சில விரோதங்களு முண்டாவதுண்டா? இல்லை. ஆதலினால் அந்த வார்த்தைகளும் வேண்டாமென்று அவன் ஆசையோடுஞ் சொல்ல, ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவின் றசூலான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களும் மறுத்தும் ஒப்பற்ற ஒரு சமாச்சாரத்தைச் சொல்லும்படி கருதி யுறுதியாகச் சிந்தித்து.

 

4881. அரியதோர் புகழ்சேர் வண்மை யப்துல்லா முகம்ம தென்போர்

     பரிவொடு கவுல்தா மீந்த படியுமு றாச்செய் தேக

     வரிசையாய் மக்கத் துள்ளோர் வழிவிடக் கடவ தென்று

     தெரிவுறத் தீட்டு கென்றார் சுகயில்பின் சிறிது சொல்வான்.

83

      (இ-ள்) அருமையான ஒப்பற்ற கீர்த்தியைப் பொருந்திய அழகிய அப்துல்லா முகம்மதென்பவர் அன்போடுங் கவுல்கொடுத்த வண்ணம் உமுறாச் செய்து செல்லுவதற்குத் திரு