இரண்டாம்
பாகம்
மக்கமா
நகரத்திலுள்ளவர்கள் சிறப்பாக வழிவிடக்கடவதென்று
தெரியும்படி எழுதுங்களென்று சொன்னார்கள். பின்னர்
அந்தச் சுகையிலென்பவன் சில வார்த்தைகளைச்
சொல்லுவான்.
4882. அம்மொழி
பொருந்தா திந்த வாண்டினுக் ககன்று போயிச்
செம்மையா யெதிர்ந்த வாண்டின் மீண்டிவண் செறிந்த
காலை
யும்மையாஞ் செறுத்தி டாம லுவந்துகச் சுமுறாச் செய்ய
வெம்மையி லாது விட்டு விடலென வெழுது மென்றான்.
84
(இ-ள்) அந்த வார்த்தை பொருந்தாது. இந்த
வருடத்தில் நீங்களிங்கிருந்தும் விலகிச் சென்று அழகாக
எதிர்ந்த இவ் வருடத்தில் திரும்பி இங்கே வந்த பொழுது
யாங்கள் உங்களைத் தடை செய்யாமல் மகிழ்ந்து
ஹஜ்ஜூமுறாச்செய்யும்படி கடுமையின்றி விட்டு விடுவதென்று
எழுதுங்களென்று சொன்னான்.
4883. சொலவரு மொழியைக்
கூறுஞ் சுகயிலை நோக்கி வள்ளன்
மலர்செறி மக்கத் துளியாம் வரத்தடை யாதோ வென்ன
வுலகினி லெவரு மெம்மை யுமக்குடைந் திடைந்தோ மென்று
சிலகுறை சொல்வ ரென்னு நாணத்தாற் செப்பி னோமால்.
85
(இ-ள்) சொல்லுவதற் கருமையான அந்த
வார்த்தையை அவ்வாறு சொன்ன அந்தச் சுகையிலென்பவனை
வள்ளலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி
செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன்
காத்திமுல் அன்பியா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு
றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் பார்த்துப்
புஷ்பங்கள் செறிந்த திரு மக்கமா நகரத்தினுள் யாங்கள்
வருவதற்குத் தடை யாது? என்று கேட்க, அதற்கு அவன் இந்தப்
பூமியின் கண் அனைவர்களும் எங்களை உமக்குத் தோற்று
வசங்கெட்டோமென்று சில நிந்தையான வார்த்தைகளைச்
சொல்வார்களென்ற வெட்கத்தினாற் சொன்னோம்.
4884. ஆகையா
லிந்த வாண்டிற் ககன்றுபின் மீள்வி ரென்ன
வோகைசேர் நபியும் வீழ்ந்த வொட்டக மெழுந்து செல்லச்
சேகற வுரைத்த வார்த்தை தீதுறா வண்ண மெண்ணி
வாகுற சுகயில் சொற்ற சொற்படி வரையு மென்றார்.
86
(இ-ள்) ஆகையினால் நீங்கள் இந்த
வருடத்தில் நீங்கிப் போய் அடுத்த வருடத்திற்கு
வாருங்களென்று சொல்ல, சந்தோஷத்தைப் பொருந்திய நமது
நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல்
குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா
|