பக்கம் எண் :

சீறாப்புராணம்

1774


இரண்டாம் பாகம்
 

முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களைச் சுமந்து வந்து விழுந்த அந்த ஒட்டகமானது எழும்பிச் செல்லுவதற்குக் களங்கமறச் சொன்ன வார்த்தையானது குற்றப்படாதபடி கருதி ஒழுங்கு பொருந்தும் வண்ணம் அந்தச் சுகையி லென்பவன் சொன்ன சொல்லின்படி எழுதுங்களென்று சொன்னார்கள்.

 

4885. எழுதின ரலியு மன்னோ ரியைந்திடும் படியே சற்றும்

     வழுவறக் கடுதா சின்கண் வரைந்தவுத் தரத்தை யென்றும்

     பழுதிலான் றூதர் நல்கப் பரிந்தந்த சுகயில் வாங்கி

     யெழுகென மிக்ற சோடிவ் விருவரு மக்கம் புக்கார்.

87

      (இ-ள்) அவ்வாறு சொல்ல, அந்த நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் உடன்பட்ட வண்ணமே அந்த அலியிபுனு அபீத்தாலிபு றலியல்லாகு அன்கு அவர்களும் எழுதினார்கள். அவ்விதங் கொஞ்சமுங் குற்றமின்றிக் காகிதத்தின்கண் எழுதிய அவ்வுத்தரத்தை எக்காலமுங் குற்றமற்றவனான அல்லாஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் றசூலாகிய அந்நபிகட் பெருமானாரவர்கள் கொடுக்க, அந்தச் சுகையிலென்பவன் அன்புற்று வாங்கி எழும்புவாயாக வென்று மிக்றசென்பவனோடு இந்த இருவர்களுந் திரு மக்கமா நகரத்தின் கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

4886. மாயத்தின் வடிவ தாக வந்தவர் போய பின்னைக்

     காயத்தி னானம் வீசும் கபீபுகச் சுமுறாச் செய்ய

     நீயத்து நினைந்த தன்மை தடையற நீங்க வேண்டித்

     தேயத்தோர் புகழ வொட்டை யறுத்துநற் குறுபான் செய்தே.

88

      (இ-ள்) தீமையினது சொரூபமாக வந்தவர்களான அந்தச் சுகையிலும் மிக்றசும் அவ்வாறு போன பின்னர்ச் சரீரத்தின் கண் கஸ்தூரி வாசனையானது வீசா நிற்கும் ஹபீபென்னுங் காரணப் பெயரையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் ஹஜ்ஜூமுறாச் செய்யும்படி நிய்யத்து எண்ணிய தன்மையினது தடையானது முழுவதும் அகலவேண்டி நாட்டிலுள்ளவர்கள் துதிக்கும் வண்ணம் அந்த ஒட்டகங்களை யறுத்து நல்ல குறுபான் செய்து.