இரண்டாம்
பாகம்
4887. தலைமுடி யிறக்கி
நீங்கள் சகலரிவ் வொழுங்கு செய்து
மலைவற விருப்பி ரென்றா ரனைவரு மகிழ்ச்சி கூர்ந்து
கலைபயி லிறசூல் சொன்ன கட்டளைப் படியே செய்து
குலவரை யனைய திண்டோட் குரிசிலைப் புகழ்ந்து நின்றார்.
89
(இ-ள்) தலைமுடியைக் களைந்து நீங்கள்
யாவர்களும் இம்முறையாகச் செய்து மயக்கமறும்படி
இருங்களென்று சொன்னார்கள். அவர்களியாவருஞ்
சந்தோஷமானது அதிகரிக்கப் பெற்று வேதங்களெல்லாம்
புகழுகின்ற றசூலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி
செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன்
காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் சொன்ன உத்தரவின் பிரகாரஞ்
செய்து அஷ்டப் பருவதங்களை யொத்த திண்ணிய
தோள்களையுடைய குரிசிலான அந்நபிகட்
பெருமானாரவர்களைத் துதித்து இருந்தார்கள்.
4888. அருள்பெறு மிசுலா மான
வரிவையர் புதல்வர் மற்றோர்
தெருளுறு கிளைக டம்பாற் சேரவே தடையா யுற்றோர்
பருவர லொழித்து வள்ளல் பாசறை புகுந்த பின்னர்
பொருவிலா மாந்த ரெல்லா மதீனத்தை நோக்கிப்
போனார்.
90
(இ-ள்) அவர்கள் அவ்வாறிருக்க வள்ளலான
நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா
செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா
காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்கள் காருண்ணியத்தைப் பெற்ற தீனுல் இஸ்லாமென்னும்
மெய்ம்மார்க்கத்திலான பெண்கள் புத்திரர்கள்
மற்றவர்களான தெளிவு பொருந்திய தங்களது
பந்துக்களிடத்திற் சேருவதற்குத் தடையாயிருந்தவர்களது
துன்பங்களை யகற்றித் தங்களது பாசறையின் கண் போய்ச்
சேர்ந்த பிற்பாடு ஒப்பற்ற அசுஹாபிமார்க ளனைவருந் திரு
மதீனமா நகரத்தை விரும்பிப் போனார்கள்.
4889. வடிவுறு கதிர்வாட்
செங்கை முகம்மது நபியு மிக்க
படிபுகழ் சகுபி மாரும் பாலரு மடந்தை மாருங்
கடிகமழ் பொழிலும் வாவிக் கரைகளு மலையு நீந்தி
யடிநிலம் படரக் காந்து மருந்திறற் பாலை கண்டார்.
91
(இ-ள்) அழகு பொருந்திய பிரகாசத்தைக்
கொண்ட வாளாயுதத்தைத் தாங்கிய சிவந்த கையையுடைய நமது
நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல்
முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா
முகம்மது முஸ்தபா றசூல்
|