இரண்டாம்
பாகம்
4942. மலையெழுத் திரண்டதோண்
மன்ன ரார்த்தெழுந்
தொலியுறழ் கொடுங்கணை யொன்று விட்டனர்
முலைதிகழ் புயங்களின் மூழ்க வெட்சியார்
நிலைபெற லின்மையா னிரையை விட்டனர்.
31
(இ-ள்) அவ்வாறு சென்று மலையைப் போலும்
எழும்படி திரண்ட தோள்களையுடைய மன்னவரான அந்தச்
சல்மா றலியல்லாகு அன்கு அவர்கள் ஆரவாரித்து எழும்பி
இடியைப் போன்ற கொடிய ஓரம்பை விட்டார்கள்.
அவ்வம்பானது தனங்களினிடத்து விளங்கிய அந்தக்
காபிர்களது தோள்களிற் போய்த் தைத்து முங்க,
அப்பசுநிரைகளைக் கவர்ந்து கொண்டு போன அவர்கள்
நிலைபெற லின்றி அப்பசுக் கூட்டங்களை விட்டார்கள்.
4943. தொறுவினை விட்டிழிந்
தோடிச் சூன்முகி
னிறைதரு வரைநெறி முழைஞ்சிற் சார்ந்தனர்
பிறழ்பறழ் காலிக ளனைத்தும் பின்னர்விட்
டறைகழல் வீரரங் கவர்பின் னேகினார்.
32
(இ-ள்) அவ்வாறு அவர்கள் அந்தப் பசுக்
கூட்டங்களை விட்டு இழிந்து ஓடிக் கருப்பத்தைக் கொண்ட
மேகங்கள் நிறைந்த ஒரு மலையினது மார்க்கத்திலுள்ள
குகையிற் சேர்ந்தார்கள். ஒலிக்கா நிற்கும்
வீரக்கழலைத் தரித்த வீரரான அந்தச் சல்மா
றலியல்லாகு அன்கு அவர்கள் பிறழ்கின்ற குட்டிகளையுடைய
அந்தப் பசுக்கூட்டங்க ளெல்லாவற்றையும் தங்களுக்குப்
பின்னாக விட்டு அந்தக் காபிர்களது பின்னாற்
போனார்கள்.
4944. கந்தர
மடைகிடந் தலறுங் கந்தரத்
துந்துதோ லெருத்தினி லுகளும் வெள்ளறு
கிந்துழை வரக்கரு மிரலை யென்றுதா
வந்தர முகட்டினி லமர்ந்து வைகினார்.
33
(இ-ள்) அவ்வாறு போய் மேகங்கள் அடையாகக்
கிடந்து ஒலிக்கா நிற்கும் மலைக் குகையினிடத்து
ஓங்குகின்ற யானையினது பிடரியிற் பாயும்
வெண்ணிறத்தைக் கொண்ட சிங்கமானது சந்திர னானது
பக்கத்தில் வர, அதில் தோற்றுகின்ற களங்கத்தைக்
கரியமானென்று நினைத்துத் தாவா நிற்கும் அந்தரத்தைக்
கொண்ட ஒரு மலையினது உச்சியி லுறைந் திருந்தார்கள்.
|