பக்கம் எண் :

சீறாப்புராணம்

190


முதற்பாகம்
 

(இ-ள்) அவ்வாறவர்கள் அத்தரு நிழலின்கண் இறங்கித் தாமதித்ததிருந்து விட்டு எழும்பிப் போகும்படி எண்ணிடும் அந்தச் சமயத்தில், பிரகாசியாநிற்கும் ஒரு கையானது பெரிதாக அவ்விடத்தில் நீளும்படி ஹலிமா அவர்கள் தங்களது கண்களினாற் கண்டார்கள். காணவே அங்கு தருமமானது கிடந்து ஒளிரப்பெற்ற நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைக் கண்டிலர்கள். அங்ஙனம் அவர்களைக் காணாமலாகவும் அவ்வியசனத்தால் கொலையானது கிடக்கப்பெற்ற வேற்படை போன்ற கண்களாகிய கடல்களினது மடைகள் திறந்தன.

 

449. என்ன மாயமிங் கென்னென நெட்டுயிர்ப் பொறிந்து

    வன்ன மென்மலர்க் கரநெரித் துதரத்தில் வைத்துத்

    துன்ன பூங்குழல் விரிதரச் செவ்விதழ் துடிப்பக்  

    கன்னி மாமயில் கலங்கினள் புலம்பினள் கதறி.

59

     (இ-ள்) இளம் பருவத்தையுடைய பெருமை தங்கிய மயிலான ஹலிமா அவர்கள் என்ன மாயம்? இப்போது இவ்விடத்தில் நடந்தது என்னென்று சொல்லிப் பெருமூச்செறிந்து அழகிய மிருதுவான தாமரைப் புஷ்பம் போன்ற இரண்டு கைகளையும் ஒன்றோடொன்று நெரித்து வயிற்றின்கண்வைத்து நெருங்கிய மலர்களையுடைய கூந்தலானது அவிழ்ந்து விரிந்திடும்படியாகவும் சிவந்த அதரங்கள் துடிக்கும்படியாகவும் துன்பமுற்றார்கள். அழுது புலம்பினார்கள்.

 

450. படியின் மீதினி லோடுவ டேடுவள் பதறிக்

    கடிதிற் கன்முழை முட்செறி பொதும்பினுங் கவிழ்ந்து

    நெடிது நோக்குவள் செடியறக் கிளறுவ ணிகரில்

    வடிவு றும்மக வேயெனக் கூவுவள் வருந்தி.

60

     (இ-ள்) அன்றியும் பூமியின்மே லோடுவார்கள். நடுக்கமுற்று எவ்விடத்துந் தேடுவார்கள். ஆங்குள்ள மலைக்குகைகளிலும் முட்கள் நெருங்கிய மரச்செறிவுகளிலும் விரைவாகச் சென்று குனிந்து அதிகமாய்ப் பார்ப்பார்கள். செடிகள் முழுவதும் அறும்படிக் கிளப்புவார்கள். வருத்தமுற்று ஒப்பில்லாத அழகு பொருந்திய எனது மகனே! என்று சொல்லிச் சத்தமிடுவார்கள்.

 

451. வெய்ய கானிடை நீங்கவுங் காண்கிலன் வேறோர்

    கைய லாற்பினைப் பிறரெடுத் தேகவுங் காணே

    னுய்யு மாறினி யேதென வுலைந்துட லொடுங்கி

    அய்ய கோமக னேவிதி யோவென வழுதாள்.

61

     (இ-ள்) அன்றியும் கொடிய இக்காட்டினிடத்தில் எனது புத்திரரான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள்