பக்கம் எண் :

சீறாப்புராணம்

202


முதற்பாகம்
 

பாதங்களிற்றொழுத ஒப்பில்லாத தங்கையாகிய ஆமினா அவர்களை அவர்களொவ்வொருவரும் எனது ஜீவன், எனது ஜீவனென்று சொல்லிக் கட்டியணைத்து தங்களது குலத்திற்கெல்லாம் பொருந்திய உயிரான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களைத் தங்களின் கைகளினால் எடுத்து ஆசீர்வதித்தார்கள்.

 

485. பிடிநடை யாமினா பெரிய தந்தைதன்

    வடிவுறு மைந்தரு மன்னு சின்னையர்

    குடிவளர்த் திடுங்குலக் கொற்ற வேந்தரு

    மடிகளென் றகுமதி னடியைப் போற்றினார்.

4

      (இ-ள்) அன்றியும் பெண் யானை போலும் நடையினையுடைய ஆமினா அவர்களின் அழகு பொருந்திய பெரிய தகப்பனா ரவர்களின் புத்திரர்களும் சிறிய தகப்பனாரவர்களின் மேன்மை தங்கிய கோத்திரத்தை வளர்க்கா நிற்கும் வெற்றியையுடைய அரசர்களான புத்திரர்களும் தங்களது குருவென்று சொல்லி அஹமதென்னுந் திருநாமத்தையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களின் பாதங்களைத் துதித்தார்கள்.

 

486. அனநடைச் சின்மொழி யாமி னாதிருத்

    தனையருந் தம்பிய ரியாருந் தன்குல

    மனைமயி லனைவரு மனம கிழ்ச்சியாற்

    கனைகட லமுதென நபியைக் காமுற்றார்.

5

     (இ-ள்) மேலும் அன்னப்பட்சி போன்ற நடையையும் சிறிய வொலியினது வார்த்தைகளையுமுடைய ஆமினா அவர்களின் அழகிய தமையன்மாரும் தம்பிமாரும் மற்றப் பேர்களும் தங்களது குடும்பத்தாரின் வீட்டின் கண்ணுள்ள மயில் போல்வராகிய பெண்களனைவரும் உள்ளக்களிப்பினால் சத்திக்கா நிற்கும் சமுத்திரத்தின்கண் பிறந்த தேவாமிர்தத்தைப் போலும் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களை விருப்பமுற்றார்கள்.

 

487. இப்பெரு முவகையுற் றிருப்ப மன்னெறிக்

    கொப்பரு மதீனமென் றோது மூரிடைத்

    துப்புறழ் மதுரவாய்ச் சிறுவர் சூழ்தர

    மைப்புயன் முகம்மதோர் வாவி நண்ணினார்

6

     (இ-ள்) அப்பந்துக்கள் யாவர்களும் இந்த விதமாகப் பெரிய விருப்பமுற்று இருக்கப் பொருந்திய சன்மார்க்கத்திற்கு வேறே ஒப்புச் சொல்லுதற்கரிதான மதீனமென்று சொல்லும் நகரத்தில்