பக்கம் எண் :

சீறாப்புராணம்

257


முதற்பாகம்
 

வராநிற்கும் சாஸ்திரவல்லமையுள்ள அப்பண்டிதனுக்குத் தங்களின் வாயினைத் திறந்து சொல்ல, அவன் தனது மனசின்கண் கூர்க்க யோசித்துப் பார்த்துத் தெளிவடைந்து இவர்களின் வாசனைபொருந்திய தாமரை மலர்போலும் முகத்தை நோக்கி இக்காரணம் இனிமைபொருந்தத் தேனீக்கள் உலாவப்பெற்ற தோள்களையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் உம்மை விவாக முடித்திடும்படி விரும்பிக் கொண்டதாகுமென்று கூற, அதைக்கேட்டு, அக்கதீஜா அவர்கள் சரீரமும் மனமும் குளிர்ச்சியடைந்திருந்திடும் சமயத்தில்.

 

650. மதும மார்த்தெழு புயஅபித் தாலிபு முகம்மது நயினாரும்

    விதுவுஞ் சேட்டிளம் பருதியுங் கலந்துடன் விரைவொடு தெருவூடே

    புதுமை யாநடந் தணிநில வெறித்திடப் புனையிழைக் கதிசாதன்

    சுதைகொண் மண்டப மணிக்கடைப் புகுந்தனர் துணைவிழி களிகூர.

54

     (இ-ள்) தேனீக்களானவை யொலித்து எழாநிற்கும் தோள்களையுடைய அபீத்தாலிபவர்களும் நயினாரான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களும் சந்திரனும் இளம்பருவத்தையுடைய சூரியனும் சேர்ந்து ஒன்றோடொன்று கலந்து நடந்தாற்போல வீதியினிடமாய் விரைவோடும் அதிசயத்துடன் இரண்டு கண்களும் சந்தோஷம் பெருகும்படி நடந்து சென்று அழகிய பிரகாசத்தை வீசிட, அலங்கரிக்கப்பட்ட ஆபரணங்களைத் தரித்த கதீஜா அவர்களின் வெண்சாந்தினைக் கொண்ட மண்டபத்தினது இரத்தினங்கள் அழுத்திய வாசலிற் போய்ப் புகுந்தார்கள்.

 

651. இருவ ரும்வரக் கண்டன ரெழுந்திருந் திணைமல ரடிபோற்றிச்

    சொரியு மென்கதி ராதனத் திருத்திநந் தூய்மலர்ப் பதநோவ

    வரிதில் வந்ததென் புன்மொழிச் சிறியவ ரறிவிலர் மனைதேடித்

    தெரியக் கூறுமென் றஞ்சிநின் றுரைத்தனர் தேமொழிக் கதிசாவே.

55

     (இ-ள்) மதுரந்தங்கிய வார்த்தைகளை யுடைய கதீஜா அவர்கள் அவ்வாறு அபீத்தாலிபவர்களும் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களும் தங்கள் மனையைத் தேடி வருவதைப் பார்த்து எழுந்திருந்து அவர்களின் தாமரைமலர் போன்ற இரண்டு திருவடிகளையுந் துதித்து மெல்லிய கிரணங்களைச் சிந்தாநிற்கும் ஆசனத்தின்கண்ணிருக்கச் செய்து நமது பரிசுத்தமான கமலமலர் போலும் பாதங்கள் நோவும்படி புன்மையான வார்த்தைகளை யுடைய சிறியவரான அறிவில்லாத எமது வீட்டைத் தேடி அரிதாக வந்த காரணம் யாது? அதை