பக்கம் எண் :

சீறாப்புராணம்

278


முதற்பாகம்
 

     696. மந்தரம் பொருவா தெழுந்தபொற் புயத்து

              முகம்மது மேறுவா கனத்தின்

         கந்தரக் கயற்றை யசைத்திட வுளத்தின்

              கருத்தறிந் தொட்டகங் களித்துச்

         சுந்தரப் புவியில் வலதுகா லோங்கித்

              தொட்டிடத் தொட்டவப் போதிற்

         சிந்துநேர் கடுப்ப நுரைதிரை பிறங்கச்

              செழித்தெழுந் ததுநதிப் பெருக்கே.

17

     (இ-ள்) அவ்வாறு அவர்கள் பேசிக் கொள்ளவே மலைகளுந் தமக்கொப்பாகாதபடி யோங்காநிற்கும் அழகிய புயங்களையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுந் தாங்கள் ஏறியிருக்கப்பட்ட வாகனமாகிய ஒட்டகையின் கழுத்தினது நாணயக் கயிற்றை அசைக்கவும், அவ்வொட்டகமானது அவர்களது மனத்தின் கண்ணுள்ள எண்ணத்தைத் தெரிந்து சந்தோஷமடைந்து அழகிய பூமியின்மீது தனது வலதுகாலை யோங்கித் தோண்டவும், தோண்டிய அந்தச் சமயமே சமுத்திரத்தைப் போல விரைவினில் நுரைகளும் திரைகளும் பிரகாசிக்கும்படி ஆற்றினது பிரவாகஞ் செழிப்புற் றெழும்பினது.

 

     697. ஆறெழுந் தோடிப் பாலையைப் புரட்டி

              யழகுறு மருதம தாக்கத்

         தேறல்கொப் பிளித்து வனசமுங் குவளைத்

              திரள்களுங் குமுதமும் விரிய

         வேறுபட் டுலர்ந்த மரமெலாந் தழைத்து

              மென்றழை குளிர்தரப் பூத்துத்

         தூறுதேன் றுளித்துக் கனிகளுங் காயுஞ்

              சொரிதரச் சோலைசூழ்ந் தனவே.

18

     (இ-ள்) அவ்வாறு ஆறானது எழும்பி எவ்விடமும் ஓட்டமுற்றுப்பரவி அந்தப் பாலை நிலத்தைத் திருப்பி அழகு பொருந்திய மருதநிலமாக்கவே, தாமரைகளும் குவளைக் கூட்டங்களும் ஆம்பல்களும் மதுவைக் கக்கி மலர, வேற்றுமைப்பட்டுக் காய்ந்த விருட்சங்களனைத்தும் குளிர்ச்சியுறும் வண்ணம் மிருதுவாகிய தளிர்களைத் தளிர்த்துப் பூத்துப் பொழியாநிற்கும் தேனைச் சிந்திப் பழங்களும் காய்களும் சொரியும்படியாக நானாபக்கங்களுஞ் சோலைகள் சூழ்ந்தன.

 

     698. வற்றுறாச் செல்வப் பெருக்கினி தோங்கும்

              வகுதையும் பதியுசை னயினார்

        பெற்றபே றிதுகொ லெனமுழு மணியாய்ப்

              பிறந்தமெய்த் துரையபுல் காசீஞ்